தடுத்தாட்கொண்ட புராணம் 415
என்று வருந்தும் வண்ணம். நீள் நீளமான, மறுகில்-திருவா ரூரில் உள்ள ஒரு திருவீதியில். வந்தார்-அந்த நாயனார் எழுந்தருளினார்.
பிறகு உள்ள 188-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு
'தங்கத்தால் செய்யப் பெற்ற சேணத்தையும் அங்கவடி களையும் உடைய ஒரு குதிரையை அலங்காரம் செய்து அதன்மேல் ஏறிக்கொண்டு, வருகிறவர்கள் தமக்குப் பின்னே வர விளங்குகின்ற பிரகாசத்தை வீசும் வாகுவலயங்களை அணிந்த பொலிவுபெற்ற தோள்களுக்கு நடுநடுவே நெருங்கி; ம்லர்மாலை அழகு கிளர்ந்து எழும் நிழல் சூழ்ந்திருக்க, இருக்குவேதம், யஜுர்வேதம், சாமவேதம், அதர்வண்வேத்ம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய அந்தணர்களோடும் மாலையை அண்ந்த அழகிய தோள்களைப் பெற்றவனர்கிய சுந்தர மூர்த்தி தன்னுடைய தலைவனாகிய வன்மீக நாதன் எழுந் தருளியிருக்கும் ஆலயத்தை அடைந்தான். பாடல் வ்ருமாறு:
பொலங்கலப்புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத
இலங்கொளி வலயப் பொற்றோள்
இடையிடை மிடைந்து தொங்கல்
கலம்கிளர் கீழல் சூழ
கான்மறை முனிவ ரோடும். அலங்கலந் தோளி னான்வங்
தணைந்தனன் அண்ணல் கோயில்."
பொலம்-தங்கத்தால் செய்யப் பெற்ற, கல-சேணத்தை :யும் அங்கவடிகளையும் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். "ஆபரணங்களைக் கொண்ட எனலும் ஆம்; ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. புரவி-குதிரையை. பண்ணி-அலங்காரிம் செய்து. ப்: சந்தி. போதுவார்-அதன்மேல் ஏறிக்கொண்டு வருகிறவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். பின்பு-தமக்குப்