பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராண்ம் 41&

விதத்தில். எதிர்-அந்த நாயனாருக்கு முன்னே. தோன்றிதம்முடைய காட்சியை வழங்கி. நிற்க-நின்று கொண்டிருக்க. ப்! சந்தி. பாதங்கள்-அந்த நாதருடைய திருவடிகளை. பணிந்து-வணங்கி. பூண்டு - தம்முடைய தலையின்மேல் அணிந்து. -

பிறகு உள்ள 191-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'நிலைபெற்று விளங்கும் பெருமையைப் பெற்ற அழகிய பெரிய வேதமாகிய வண்டு சுற்றிக் கொண்டு வன்மீக நாதரு. டைய பக்தர்களினுடைய திருவுள்ளங்களாகிய மலர்ந்த செந்தாமரை மலர்களில் நல்ல பெருமையைக் கொண்ட பரமானந்தம் என்னும் நல்ல தேன் அடியேனுடைய திறத் திலும் வழங்கி அடியேனுக்கு எதிரில் நின்று விளங்கியது.” பாடல் வருமாறு: -

மன்பெ ருந்திரு மாமறை வண்டுசூழ்ந் தன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை கள்பெ ரும்பர மானந்த நன்மது என்த ரத்தும் அளித்தெதிர் கின்றன. " இந்தப் பாடல் சுந்தர மூர்த்தி நாயனார் எண்ணுவதைக் கிறுவது. மன்-நிலைபெற்று விளங்கும். பெரும்-பெருமை யைப் பெற்றிருக்கும். திரு அழகிய மா-பெருமையைத் தரும். மறை-வேதமாகிய, வண்டு சூழ்ந்து-வண்டு சூழ்ந்து கொண்டு. அன்பர்-வன்மீக நாதருடைய பக்தர்களுடைய, ஒருமை பன்மை மயக்கம். சிந்தை-திருவுள்ளங்க்ளாகிய ஒருமை பன்ழை மய்க்கம். அலர்ந்த மலர்ச்சிய்ை அடைந்த, செந்தாமரை-செந்தாமரை மலர்களில் உண்டர்ன்:"ஒருமை பன்மை மயக்கம். நன்-நல்ல. பெரும்-பெருமைய்ை வ்ழங்கும். பிரமானந்த-பரமானந்தமாகிய, நன்-நன்மையை வழங்கும். மது-தேன். என்-அடியேனுடைய தரத்தும்-திறத்திலும். அளித்து-வழங்கி. எதிர்-அடியேனுக்கு எதிரில். நின்றனநின்றது; நின்றது என்ற பாடம் இருக்கலாம். என்று தோன்றுகிறது.