பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439 . பெரிய புராண விளக்கம்:

உள்ளமாகிய தாமரை மலர்: 'உள்ளப் புண்டரீகத் துள். விருக்கும் புராணர்.', 'மலர்மிசை ஏகினான்.” (3) என்ற. திருக்குறளுக்குப் பரிமேலழகர், 'அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின், ஏகினான் என இறந்த காலத்தால் கூறினார். என்று எழுதிய உரையையும், 'பொள்ளலிக் காயந் தன்னுள் புண்டரீ கத்தி ருந்த வள்ளலை.”, “புத்தி யாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி.' (திருநாவுக்கரசு நாயனார். தேவாரம்), “நினைவொடு பதுமநன் மலரது. மருவிய சிவன்.' (திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தேவாரம்) என்று வருவனவற்றைக் காண்க.

பிறகு வரும் 192ஆம் பாடலின் கருத்து வருமாறு: "இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்துை. அடையும் வண்ணம் சிதம்பரம் திருக்கோயிலில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளின; யமனுடைய அருமையான உயிர் போகும் வண்ணம் கோபத்தைக் கொண்டன: மலர்மாலை தங்கிய கூந்தலைப் பெற்ற வளும் பெருமையைப் பெற்ற இமாசல அரசனுடைய புதல்வியுமாகிய பார்வதிதேவி தன்னுடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருக்கரங்கள் நல்ல பண்போடு, வருடுவதால் சிவந்த நிறத்தைப் பெற்றன. (நடராஜப். பெருமானுடைய திருவடிகள்.) பாடல் வருமாறு: ஞாலம் உய்ய நடம்மன்றுள் ஆடின. காலன் ஆருயிர் மாளக் கறுத்தன: மாலை தாழ்குழல் மாமலை யாள்செங்கை சீஸ் மாக வருடச் சிவந்தன. "

இந்தப் பாடல் நடராஜப் பெருமானுடைய திருவடிகளி: னுடைய சிறப்பைச் சொல்வது. ஞாலம்-இந்தப் பூமண்டலத். தில் வாழும் மக்கள்; இட ஆகுபெயர். உய்ய உஜ்ஜீவனத்தை, அடையும் வண்ணம். நடம்-திருநடனத்தை. மன்றுள்-சிதம் பரத்தில் விளங்கும் ஆலயத்தில் உள்ள திருச்சிற்றம்பலத்தில்.