34 பெரிய புராண விளக்கம்-2
குங்கும-குங்குமப்பூவை அரைத்த குழம்பைப் பூசிக்கொண்ட, முலையினாரும்-கொங்கைகளைப் பெற்ற பெண்மணிகளும்.
பரந்து-பரவி நின்று. எழு-ஊக்கத்தோடு எழுந்து வரும்.
கொள்கைத்து ஆகி-கொள்கையைப் பெற்றதாகி.
பெண்களின் கொங்கைகளுக்குச் சூதாடும் வல்லக்காய்கள்
உவமை: சூதகம்சேர் கொங்ன்கயாள். ’’, சூது லாவிய கொங்கையொர் பங்குடையீர்.”, சூதுறு தளிர்நிற வன முலை யவை’ என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
பாடியருளியவற்றைக் காண்க.
பெண்களின் கொங்கைகளுக்கு அரும்புகள் உவமை: 'அரும்பும் குரும்பையும் அலைத்தமென் கொங்கை. , அருப்பினார் முலைமங்கை பங்கினன்' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும்’, ‘அருப்புப் போல் முலை யார். ’, ‘அருப்போட்டு முலைமடவாள்.’’ என்று திருநா வுக்கரசு நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.
பிறகு உள்ள 22-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அருமையாக விளங்கும் திருமண ஊர்வலம் எழுந்து வந்த சமயத்தில் முழங்கிய வெண்மையான சங்கவாத்தியங்க ளாலும், பெண்மணிகள் தங்களுடைய காதுகளில் அணிந் திருக்கும் பெரிய மகரக் குழைகளாலும், அவர்களுடைய ஆபரணங்களில் பதித்து விளங்கிய பிரகாசம் வீசும் மானிக் கங்களாலும் , நெருங்கியுள்ள மயிற் பீலிகள் சோலையைப் போல நீலநிறத்தைப் பெற்ற ஒளி அலைகளாலும், கருமை யான சமுத்திரத்தில் வீசும் அலைகள் கிளர்ச்சியைப் பெற்றுக் கரையை மோதியதைப் போன்ற தோற்றத்தோடு புத்துார் விளங்கியது.” பர்டல் வருமாறு:
அருங்கடி எழுந்த போழ்தில்
ஆர்த்தவெள் வளைக ளாலும் இருங்குழை மகரத் தாலும்
இலங்கொளி மணிக ளாலும்