பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 35

நெருங்கிய பீலிச் சோலை

நீலநீர்த் தரங்கத் தாலும் கருங்கடல் கிளர்ந்த தென்னக்

காட்சியிற் பொலிந்த தன்றே.'

அரும்-அருமையாக இருக்கும். கடி-திருமண ஊர்வலம். எழுந்த-எழுந்து வந்த போழ்தில்-சமயத்தில். ஆர்த்தஊதப்பட்டு முழங்கிய. வெள்-வெண்மையான வளைக ளாலும்-சங்க வாத்தியங்களாலும். இரும்-பெரியவையாக இருக்கும். குழை மகரத்தாலும்-ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்மணிகள் தங்களுடைய காதுகளில் அணிந் திருக்கும் மகரக் குழைகளாலும்; ஒருமை பன்மை மயக்கம். இலங்கு-அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களில் பதிக்கப் பெற்று விளங்கும். ஒளி-பிரகாசத்தை வீசும். மணிகளா லும்-மாணிக்கங்களாலும். நவரத்தினங்களாலும், எனலும் ஆம். அவையாவன: முத்து, நீலக்கல், மரகதக்கல், மாணிக் கம், பதுமராகம், கோமேதகம், வயிரம், பவளம், வைடூரி யம் என்பவை. நெருங்கிய-நெருக்கமாக விளங்கிய, பீலி. ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களுடைய கைக. ளில் வைத்திருக்கும் விசிறிகளாகிய மயிற் பீலிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம் ச்:சந்தி. சோலை-பொழில். மயிற். பீலி விசிறிகள் மிகுதியாக இருந்தமையால் அவை சோலை யைப் போலக் காட்சியை அளித்தன. நீல-அந்த மயிர்ப்பீலி கிளின் நீலமாகிய, நீர்-நிறமாகிய இயல்பு. த்:சந்தி, தரங் கத்தாலும்-அலைகளைப் போலத் தோன்றியதாலும். தரங்’ கம்: ஒருமை பன்மை மயக்கம். கரும் கடல்-கருமையான கடலில் வீசும் அலைகள்; இட ஆகுபெயர். கிளர்ந்தது. கிளர்ச்சியைப் பெற்று எழுந்தன. ஒருமை பன்மை மயக்கம். என்ன- என்று கூறும் வண்ணம். ச் சந்தி. காட்சியில்தோற்றத்தோடு உருபு மயக்கம். பொலிந்தது-புத்துரர் விளங்கியது. அன்று, ஏ. இரண்டும் ஈற்றசை நிலைகள்.