பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் - 435

வேதவாரணம்: வேத மாகிய வெஞ்சுட ரானையார்.” என்று திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியதைக் காண்க.

பேதையேன் செய் பிழை பொறுத் தாண்டன: 'பின்னை என்பிழை யைப்பொறுப் பானை.', 'தொண்ட னேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை.', பிழை யுளன பொறுத்திடுவர்.' என்று சுந்தர மூர்த்தி நாயனாரே பாடியிருப்பதைக் காண்க.

பொருந்தி இருந்தன: "பொன்னடிக் கென்னைப் பொருந்த வைத்த வேயவனார்.' என்று அந்த நாயனாரே பாடுவதைக் காண்க.

அடுத்து வரும் 195-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

"இத்தகைய முறையில் துதித்த ஆளுடைய நம்பியாகிய சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இடபவாகனத்தின்மேல் ஏறி எழுந்தருளும் வீரராகிய வன்மீக நாதரும் அந்த நிலையில் அந்த நாயனார் வேண்டிக் கொண்ட அந்த விண்ணப்பத்தின் வண்ணம் வழங்கியருளுவதை விரும்பி நிலைபெற்ற சீர்த்தி யைக்கொண்ட அடியவர்களுடைய வழிவழி வரும் தொண் டினைத் தெரிந்து கொள்ளுமாறு உரிய ஆற்றலை வழங்கிப் பிறகும் அந்த அடியவர்களுடைய பெருமைகளைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரானார். பாடல் வருமாறு:

இன்னவாறேத்தும் கம்பிக் கேறுசே வகனார்

. . . . . . . . தாமும் அங்கிலை அவர்தாம் வேண்டும் அதனையே

அருள வேண்டி மன்னுசீர் அடியார் தங்கள் வழித்தொண்டை

உணர நல்கிப் பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை

அருளிச் செய்வார். ' இன்ன-இத்தகைய ஆறு-முறையில், ஏத்தும்-துதிக்கும், நம்பிக்கு-ஆளுடைய நம்பியாகிய, சுந்தர மூர்த்தி நாயு னாருக்கு. ஏறு-இடபவாகனத்தின்மேல் ஏறிக்கொண்டு