பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 437

இயல்பினால் உலகத்தில் வாழும் மக்களை வெற்றி கொள் வார்கள்; ஒரு குறையும் இல்லாதவர்கள்; பிறரிடம் காண முடியாத அருமையாகும் நிலையில் பிறழாமல் நிலைத்து நிற்பவர்கள்; எம்மிடம் வைத்த பக்தியினால் பேரா னந்தத்தை நிறைய அடைவார்கள்: அகப்பற்று புறப்பற்று என்னும் இரண்டு பற்றுக்களையும் கடந்து நிற்பவர்கள் அவர்கள்; இத்தகைய அடியவர்களை நீ சென்று சேர்வா யாக." என்று வன்மீக நாதர் சுந்தர மூர்த்தி நாயனாருக்குத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து. பாடல் வருமாறு:

பெருமையால் தம்மை ஒப்பார்;

பேணலால் எம்மைப் பெற்றார்; ஒருமையால் உலகை வெல்வார்: ஊனமேல் ஒன்றும் இல்லார்; அருமையாம் நிலையில் கின்றார்: அன்பினால் இன்பம் ஆர்வார்; இருமையும் கடந்து கின்றார்;

இவரை நீ அடைவாய்." என்று. '

இந்தப் பாடல் குளகம். வன்மீக நாதர் சுந்தர மூர்த்தி நாயனாருக்குத் திருவாய்மலர்ந்தருளிச் செய்ததைச் சொல் வது; சிவனடியவர்களின் இயல்புகளைப் புலப்படுத்துவது. பெருமையால்-தங்களுக்கு உள்ள பெருமையினால். தம்மைதங்களையே. ஒப்பார்-ஒத்து விளங்குகிறவர்கள் அந்த அடி யவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அவர்களுக்கு வேறு யாரையும் உவமையாகக் கூற இயலாது என்பது கருத்து. பேணலால்-இடைவிடாமல் விரும்பி வழிபடுவதனால். எம்மைப் பெற்றார்-எம்மைத் தலைவராகப் பெறும் பேற்றை அடைந்தவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஒருமையால்தங்களுடைய திருவுள்ளங்களில் அமைந்திருக்கும் ஒருமைப் பாட்டினால். உலகை-இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்களை இட ஆகுபெயர். வெல்வார். வெற்றியைக் கொள்வார்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஊனமேல்