பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 பெரிய புராண விளக்கம்-2

  • நீதியால் அவர்கள் தம்மைப்

பணிந்துநீ கிறைசொல் மாலை கோதிலா வாய்மை யாலே

பா டென அண்ணல் கூற. '

இந்தப் பாடல் குளகம். நாதனார்-தலைவராகிய வன்மீக நாதர். அருளிச் செய்ய-அவ்வாறு திருவாய் மலர்ந் தருளிச் செய்ய. நம்பியாரூரர்-நம்பியாரூரராகிய சுந்தர மூர்த்தி நாயனார். நான்-அடியேன். இங்கு-இந்தத் திரு வாரூர்ப் பூங்கோயிலில். ஏதம்-துன்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். தீர்-போக்கும். நெறியை-வழியை. ப்: சந்தி, பெற்றேன்-பெறும் பேற்றை அடைந்தேன். என்று-என எண்ணி, எதிர்-வன்மீக நாதருடைய சந்நிதிக்கு எதிரில். வணங்கி-வன்மீக நாதரைப் பணிந்து. ப்: சந்தி. போற்றவாழ்த்த நீதியால்-நியாயமான முறைப்படி. அவர்கள் தம்மை-அந்த அடியவர்களை; தம்: அசைநிலை. ப்: சந்தி. பணிந்து-வணங்கி. நீ நிறை-நீ சுவை நிரம்பிய சொல்-செய் யுட் சொற்கள் அடங்கிய; ஒருமை பன்மை மயக்கம். மாலைமாலையாகிய ஒரு திருப்பதிகத்தை. கோது-ஒரு குற்றமும். இலா-இல்லாத இடைக்குறை. வாய்மையால்-உன்னுடைய வாக்குத் திறமையினால், ஏ: அசைநிலை. பாடு-நீ பாடுவா யாக. என-என்று; இடைக்குறை. அண்ணல்-பெருமையைப் பெற்றவராகிய வன்மீக நாதர். கூற-திருவாய் மலர்ந்தருளிச் செய்ய.

தலைவர், நாதனார்: 'நன்பொனை நாதனை.’’, 'உமை தலைவன்.', 'உயிர்கட்குமுன் தலையானவன்.", 'தளையாயின. தவிரவ் வருள் தலைவன்.', 'வினை பொருள்கள் தானாகிய தலைவன்.', "உலகங்களை நிலை பேறு செய் தலைவன்.', 'உமை தலைவனை.', 'திருப்புன் கூர்த் தலைவர்.', 'தலைவன தாள்நிழல் சார்வோம்.', “நஞ்சுசேர் கண்டம் உடையான் நாதர்.', 'தேவர் தலைவர்.', 'தலைவ நின்தாள் நிழற்கீழ் நிலைபுரிந்தார் இடர்களையாய்.', 'கரiரத்தெம் நாதன்.', 'தாய அடி