தடுத்தாட்கொண்ட புராணம் 5
பதிகத்தை. பா: ஒருமை பன்மை மயக்கம். பாடும் பரிசுபாடும் இயல்பை. எனக்கு-அடியேனுக்கு. அருள்செய்வழங்கியருள செய்வாயாக. என்ன-என்று அந்த நாயனார்
விண்ணப்பிக்க.
பின்பு உள்ள 199-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:
'பழையதும் பெருமையைப் பெற்றதும் ஆகிய இமய மலையினுடைய அரசன் பெற்றெடுத்த பரிசுத்தமானவ ளாகிய பார்வதி தேவியைத் தன்னுடைய அழகிய வாம பாகத்தில் தங்க வைத்திருக்கும் வன்மீக நாதன் உலகத்தில் வாழும் மக்கள் துன்பங்கள் போய் உஜ்ஜீவனம் அடையும் வண்ணம் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் வழங்கி யருளிய தன்னுடைய அழகிய வாக்கினால், தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்.' என்று தொடங்கி, வரம்பு இல்லாத வளப்பத்தைக் கொண்ட புகழைப் பெற்ற வர்களாகிய திருத்தொண்டர்களினுடைய திருநாமங்களை எடுத்து அமைத்துப் பண்ணைப் பெற்ற பாசுரங்களை நீ பாடுவாயாக." என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்." ... 1.5 வருமாறு:
தொல்லைமால் வரைய யந்த துரயாள்தன் திருப்
- . பாகன் அல்லல் தீர்க் துலகுய்ய மறைஅளித்த திரு - . வாக்கால்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும்
அடியேன்." என் றெல்லையில்வண் புகழாரை எடுத்திசைப்பா
மொழி. என்றார். " தொல்லை-பழையதும்; வினையாலனையும் பெயர். மால்-பெருமையைப் பெற்றதும் ஆகிய; வினையாலணையும் பெயர். வரை-இமயமலையினுடைய அரசன்: தின்ன மயக்கம். பயந்த-பெற்றெடுத்த.துரயாள்தன்-பரிசுத்தமானவ: