#52 பெரிய புராண விளக்கம்-2
ளாகிய பார்வதி தேவியினுடைய; தன்: அசைநிலை. திருஅழகிய ப்: சந்தி. பாகன்-வலப்பாகத்தில் உள்ள வன்மீக நாதன். உவகு-இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள்; இட ஆகுபெயர். அல்லல்-தங்களுடைய துன்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். தீர்ந்து-போய். உய்ய-உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களையும்; ஒருமை பன்மை மயக்கம். அளித்த-வழங்கி யருளிய. திரு-அழகிய வாக்கால்-வாக்கினால், தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன். என்று-தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கி. எல்லை-வரம்பு. இல்-இல்லாத கடைக்குறை. வண்-வளப் பத்தைக் கொண்ட, புகழாரை-புகழைப் பெற்றவர்களாகிய திருத்தொண்டர்களை ஒருமை பன்மை பயக்கம். எடுத்துஅவர்களுடைய திருநாமங்களை எடுத்துக் கூறி. இசைப்பாகொல்லிக் கெளவாணப் பண் அமைந்த பாசுரங்களை: ஒருமை பன்மை மயக்கம். மொழி-நீ பாடுவாயாக. என்றார்என்று வன்மீக நாதர் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.
மறை அளித்த திருவாக்கு: "பண்ணி லாவுமறை பாடலினான்.', 'மறையும் ஒதி.', 'மறையும் பலபாடி.”, 'துணங்குபறை பாடி', 'வேதம் ஒதி.', மொழிசூழ் மறைபாடி.', 'மறையும் பலபாடி மயானத் துறைவாரும்.', 'பாடலன் நான்மறையான்.', 'அங்கமும் நான்மறையும் அருள் செய்து., 'அங்கமொ டருமறை அருள்புரிந்தான்.', 'நான்மறை ஓதி.', 'மறையும் ஒதுவர்.', 'மொழியானை முன்னொருநாள் நான்மறை.’’, ‘மறையார்தரு வாய்மை யினாய்.”, வேத நாவினர். ’’, பாடலார் நான்மறை. யான்.", "ஓதி ஆரணம்.”, “மறைபாடினார்.', 'சொற்ற ரும்மறை பாடினார்.', 'மறைநின் றிலங்கு மொழியார்.', 'மறைவளர் நாவன்.', 'வேதம் ஒது நெறியினான். , 'மறைகள் ஒதுவர்., 'வேதம் ஒதிய நாவுடையான்.", 'பாடினாய் மறையோடுபல் கீதமும்.”, “பாடினை அரு.