பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 455

பிறகு வரும் 200-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'நிலைபெற்று விளங்கும் சீர்த்தியையும், வயல்களையும் பெற்ற திருவாரூரை ஆட்சி புரியும் அரசராகிய வன்மீக நாதரை வன்றொண்டாாகிய சுந்தர மூர்த்தி நாயனார் தம் முடைய த ை தரையில் படிய வன்மீக நாதருடைய திருவடி களைப்பணித்து அந்த நாதருடைய திருவருளைத் தம்முடைய மேலே கொண்ட சமயத்தில் முன்காலத்தில் திருமாலும் அயனும் தேடிப் பார்த்தும் திருவடிகளையும் திருமுடியையும் தெரிந்து கொள்ளாத முதல்வராகிய வன்மீக நாதர் எழுந் தருள, அந்த தலையைத் தரிசித்து அடியவர்களிடத்தில் சேர்வதற்கு அந்த நாயனார் அடைகிறவரானார். பாடல் வருமாறு:

  • மன்னுசீர் வயல் ஆரூர் மன்னவரை வன்

றொண்டர் சென்னியுற அடிவணங்கித் திருவருள்மேற்

கொள்பொழுதில் முன்னம்மால் அயன்அறியா முதல்வர்தாம்

х எழுந்தருள அங்கிலைகண் டடியவர்.பால் சார்வதனுக்

கணைகின்றார். '

மன்னு-நிலை பெற்று விளங்கும். சீர்-சீர்த்தியையும். வயல்-வயல்களையும் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். அந்த வயல்களாவன: சம்பர நெல் விளையும் வயல், குறுவை நெல் விளையும் வயல், கரும்புத் தோட்டம், வாழைமரத் தோப்பு, தென்னமரத் தோப்பு, புளியமரத் தோப்பு, மகிழ மரத் தோப்பு, வாத நாராயண மரத் தோப்பு, பலாமரத் தோப்பு, வேப்பமரத் தோப்பு, வாகைமரத் தோப்பு, வேங்கை மரத் தோப்பு முதலியவை. ஆரூர்-திருவாரூரை. மன்னவரை-ஆட்சி புரியும் அரசராகிய வன்மீக நாதரை, வன்றொண்டர்-வன்றொண்டராகிய சுந்தர மூர் த் தி நாயனார். சென்னி-தம்முடைய தலை. உற-தரையில்