பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 பெரிய புராண விளக்கம்-2

படியும்படி. அடி-வன்மீக நாதருடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். வணங்கி-பணிந்து. த், சந்தி. திருவருள்வன்மீக நாதருடைய திருவருளை. மேற்கொள் தம்முடைய மேலே கொண்ட பொழுதில்-சமயத்தில். முன்னம்-முன் காலத்தில். மால்-திருமாலும். அயன்-பிரம தேவனும். அறியா-திருவடிகளையும் திருமுடியையும் தேடிப் பார்த்தும் தெரிந்து கொள்ளாத முதல்வர்தாம்-முதல்வராகிய வன்மீக நாதர். தாம்: அசைநிலை. எழுந்தருள-அங்கே எழுந்தருள. அந்நிலை-அந்த நிலையில். கண்டு-அந்த நாதரைத் தரிசித்து. அடியவர்.பால்-திருத் தொண்டர்களிடத்தில்: ஒருமை பன்மை மயக்கம். சார்வதனுக்கு-போய்ச் சேருவதற்காக. அணை கின்றார்-அந்த நாயனார் அடைகிறவர் ஆனார்.

பின்பு உள்ள 201-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

சுந்தர மூர்த்தி நாயனார் சேய்மைக்கண் திருத் தோண்டர்களின திருக்கூட்டத்தைப் பல தடவைகளால் வணங்கிப் பக்திகூடத் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு அந்தத் தொண்டர்களுக்குச் சமீபத்தைப் போய் அடைந்து நின்று கொண்டு அழியாத வீரத்தைக் கொண்ட அவர்கள் யாவருக் கும் தனித்தனியாக அடியேன் அடியவன் என்ற கருத்தை அமைத்துப் பேராவலோடு திருத்தொண்டத் தொகை ஆகும் ஒரு திருப்பதிகத்தைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்வா ரானார். பாடல் வருமாறு:

" தூரத்தே திருக்கூட்டம் பலமுறையால்

  • * * * o - தொழுதன்பு சேரத்தாழ்ந் தெழுந்தருகு சென்றெய்தி

to e - கின்றழியா விரத்தார் எல்லார்க்கும் தனித்தனிவே

றடியேனென்

றார்வத்தால் திருத்தொண்டத் தொகைப்

பதிகம் அருள்செய்வார்.