பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 பெரிய புராண விளக்கம்-2

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்: தென்வைனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்:

திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்; என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே...' பிறகு உள்ள 203-ஆம் பாடலின் கருத்து வருமாறு: “தம்முடைய தலைவனாகிய வன்மீக நாதன் வழங்கி யருளிய சொல்லை முதலாக வைத்துச் செந்தமிழ் மொழியில் அமைந்த மாலையாகிய திருப்பதிகத்தினுடைய செம்மை யான அர்த்தத்தோடு திருத்தொண்டத் தொகையாகிய திருப் பதிகத்தைப் பாடியருளி எல்லாத் தேவர்களுக்கும் தலைவ. னாகிய வன்மீக நாதன் வழங்கியருளும் உணர்ச்சியைப் பெறவும், இந்த உலகத்தில் வாழும் மக்கள் துதிக்கவும், அடியேங்களுடைய தலைவரும் வன்றொண்டரும் ஆகிய சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளி அந்த நாதருடைய எதிரில் தரையில் விழுந்து வணங்கினார். பாடல் வருமாறு:

தம்பெருமான் கொடுத்தமொழி முதலாகத்

தமிழ்மாலைச்

செம்பொருளால் திருத்தொண்டத் தொகையான

திருப்பதிகம். உம்பர் பிரான் தானருளும் உணர்வுபெற -

- * உலகேத்த எம்பெருமான் வன்றொண்டர் பாடிஅவர் எதிர்

  • பணிந்தார். " தம்-தம்முடைய பெருமான்-தலைவனாகிய வன்மீக

நாதன். கொடுத்த-வழங்கியருளிய மொழி-சொல்லை. முத. லாக-முதலாக வைத்து. த்:சந்தி. தமிழ்-செந்தமிழ் மொழியில்.