பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 45.9%

அமைந்த. மாலை-மாலையாகிய திருப்பதிகத்தில் உள்ள. செம்-செம்மையான. பொருளால்-அர்த்தத்தோடு, உருபு மயக்கம். திருத்தொண்டத் தொகையான-திருத்தொண்டத் தொகை ஆகிய காலமயக்கம். திருப்பதிகம்-திருப்பதிகத் தைப் பாடியருளி, உம்பர்-எல்லாத் தேவர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். பிரான்தான்-தலைவனாகிய வன்மீக நாதன். தான்: அசைதிலை. அருளும்-வழங்கியருளும். உணர்வு-உணர்ச்சியை பெற-அடையவும். உலகு-இந்த உலகத்தில் வாழும் மக்கள்; இட ஆகுபெயர், ஏத்த-துதிக்க வும். எம்-அடியேங்களுடைய. இது சேக்கிழாா தம்மையும் மற்றத் தொண்டர்களையும் சேர்த்துப் பாடியது. பெருமான் தலைவரும்; ஒருமை பன்மை மயக்கம். வன்றொண்டர்வன்றொண்டருமாகிய சுந்தரமூர்த்தி நாயனார். பாடி-பாடி, யருளி. அவர்-அந்த நாதருடைய. எதிர்-எதிரில். பணிந்தார். தரையில் விழுந்து அவரை வணங்கினார்.

பிறகு வரும் 203-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: தேவர்களின் தலைவராகிய வன்மீக நாதருடைய அடியவர்கள் பெரிய மகிழ்ச்சியை அடையும் வண்ணம் நம்பி யாரூரராகிய சுந்தர மூர்த்தி நாயனார் தொண்டர்களுடைய திருக்கூட்டத்தின் நடுவில் போய்ச் சேர்ந்தார்; தம்பிரான் தோழராகிய அந்தச் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய செந்தமிழ்த் திருப்பதிகமாகிய திருத்தொண்டத் தொகையில் உள்ள முறைப்படியே அடியேங்களுடைய தலைவனாகிய, வன்மீக நாதனுடைய பந்துக்களாகிய நாயன்மார்கள் ஆற்றிய திருத்தொண்டுகளை இனிமேல் துதித்துப் பாடத். தொடங்குகிறேன். பாடல் வருமாறு: -

1. உம்பர்கா யகரடியார் பேருவகை தாமெய்த

நம்பியா ரூரர் திருக் கூட்டத்தின் நடுவணைந்தார்; தம்பிரான் தோழரவர் தாம்மொழிந்த தமிழ்

முறையே. எம்பிரான் தமர்கள்திருத் தொண்டேத்தல்

உறுகின்றேன். '