பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 460 பெரிய புராண விளக்கம்-2

இது சேக்கிழார் கூற்று. உம்பர்-எல்லாத் தேவர்களினு டைய, ஒருமை பன்மை மயக்கம். நாயகர்-தலைவாாகிய வன்மீக நாதருடைய அடியார்-அடியவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். பேருவகைதாம்-பெரிய மகிழ்ச்சியை தாம்: அசைநிலை. எய்த-அடையும் வண்ணம். நம்பியாருரர்நம்பியாரூரராகிய சுந்தர மூர்த்தி நாயனார். திருக்கூட்டத் தின்-தேவாசிரயன் என்னும் காவணத்தில் அமர்ந்திருந்த தொண்டர்களினுடைய திருக்கூட்டத்திற்கு. நடு-நடுவில். அணைந்தார்-போய்ச் சேர்ந்தார். தம்பிரான் தோழர்-தம் .பிரான் தோழராகிய, அவர்தாம்-அந்த நாயனார். த்ாம்: அசைநிலை. மொழித்த-பாடியருளிய. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த திருப்பதிகமாகிய திருத்தொண்டத் தொகையில் உள்ள ஆகுபெயர். முறையே-வரிசைப்படியே. எம்-அடியேங்களுடைய. இது சேக்கிழார் தம்மையும் வேறு தொண்டர்களையும் சேர்த்துப் பாடியது. பிரான்-தவை னாகிய வன்மீக நாதனுடைய. தமர்கள்-பந்துக்களாகிய தாயன்மார்கள். திருத்தொண்டு-ஆற்றிய திருத்தொண்டு களை ஒருமை பன்மை மயக்கம். ஏத்தல்-துதித்துப் பாடு வதை உறுகின்றேன்-தொடங்குகிறேன்.

தமர்கள்: திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்.' என்று திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியதைக் காண்க,