பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - பெரிய புராண விளக்கம்-2

காளையை-இந்தக் காளைமாட்டைப் போன்ற

மணமகனாகிய சுந்தரமூர்த்தியை. க்:சந்தி. காணநாம் பார்ப்பதற்காக. எண்-கணக்கு. இ லா த - இல்லாத; இ ைட க் கு ைற, க ண் க ள் - வி. N க ள். வேண்டும்- ந்மக்கு இருக்க வேண்டும். என்பார்.

என்று சில மக்கள் கூறுவார்கள்; ஒருமை பன்மை மயக்கம். சடங்கவி- சடங்கவி சிவாசாரியாருடைய. பேதை-பேதைப் பருவத்தில் உள்ள புதல்வி. பெண்களில்-உலகத்தில் வாழும் பெண்மணிகளுக்குள். உயர-தான் உயர்ச்சியை உடைய வளாக விளங்கும் வண்ணம். நோற்றாள்-முன் பிறவியில் நல்ல தவத்தைப் புரிந்திருக்கிறாள். என்பார்-என்று வேறு சிலர் பாராட்டுவார்கள்; ஒருமை பன்ம்ை மயக்கம். மண்இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்; இட ஆகுபெயர். களி-ஆனந்தத்தை. கூர-மிகுதியாக அடையுமாறு. வந்தஇந்த மணம் வந்த புத்துருக்கு வந்த மணம்-திருமணக் காட்சியை. கண்டு-பார்த்து. வாழ்ந்தோம்-நாங்கள் நல் வாழ்வைப் பெற்றோம். என்பார் என்று மற்றும் சில

பேர்கள் நவில்வார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.பண்களில்

பலவகையான பண்களால் உருபுமயக்கம். அந்தப் பண்

களாவன: நட்ட பாடை, தக்கராகம், பழந்தக்க ராகம்,

தக்கேசி, குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, மேகராகக்

குறிஞ்சி, யாழ்முரி, இந்தளம், சீகாமரம், காந்தாரம், பியந்

தைக் காந்தாரம், செவ்வழி, நட்டராகம், காந்தாரபஞ்சமம்,

கொல்லி,கொல்லிக் கெளவாணம், கெளசிகம், பஞ்சமம்,

சாதாரி, பழம் பஞ்சுரம், புறநீர்மை, அந்தாளிக் குறிஞ்சி, செந்துருத்தி முதலியவை. நிறைந்த-நிரம்பியுள்ள. கீதம்

இசைப்பாடல்களை ஒருமை பன்மை மயக்கம். பாடுவார்ஆடவர்களும் பெண்மணிகளும் பாடுவார்கள்; ஒருமை

பன்மை மயக்கம். ஆடுவார்கள்- அந்த இரண்டு பாலார்

களும் ஆனந்தத்தால் கூத்தாடுவார்கள்.