-48 பெரிய புராண விளக்கம்-2
வைத்து அது தாழ்ந்து இடுப்பில் வந்து விளங்க. பாடல் வருமாறு:
'கண்ணிடை கரந்தகதிர் வெண்புடம் எனச்சூழ்:
புண்ணிய நுதல்புனித நீறுபொலி வெய்தக் தண்மதி முதிர்ந்துகதிர் சாய்வதென மீதே வெண்ணரை முடித்தது விழுந்திடை தழங்க. '
இந்தப் பாடல் குளகம். கண்ணின்ட-தம்முடைய கண் களுக்கு நடுவில்; ஒருமை பன்மை மயக்கம். கரந்த-மறைந் திருந்த கதிர்-ஒளியை வீசும். வெண்-வெள்ளை நிறத்தைக் கொண்ட. படம்-துணி.. என-என்று சொல்லும் வண்ணம்; இடைக்குறை. ச்: சந்தி. சூழ்-சுற்றியிருக்கும். புண்ணியபுண்ணியத்தைப் பெற்ற நுதல்-நெற்றியில். புனிததாய்மையாகிய, நீறு-விபூதி. பொலிவு-விளக்கத்தை: தோற்றப் பொலிவை. எய்த-அடைய. த், சந்தி. தண்ட குளிர்ச்சியை உடைய மதி-சந்திரன். முதிர்ந்து-முது மையை அடைந்து. கதிர்-தன்னுடைய கிரணங்களாகிய நிலா, ஒருமை பன்மை மயக்கம். சாய்வதென-படிவதைப் போல, என: இடைக்குறை. மீது-தலையின்மேல். ஏ; அசைநிலை. வெண்-வெள்ளை நிறத்தைக் கொண்ட, நரை-நரைத்த மயிர்களை ஒருமை பன்மை மயக்கம். முடித்து-கொண்டையாக முடிந்துகொண்டு. அது-அந்த நரைத்த மயிர்கள் ஒருமை பன்மை மயக்கம். விழுந்துபிதிர்ந்து கீழே தொங்கி, இடை-தம்முடைய இடுப்பில், தழங்க்-விளங்க. . -
புனித நீறு: 'பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள். , 'பூதி யாகிய புனிதநீ றாடி.', 'தாய வெண்ணிறு துன தந்தபொன் மேனியும்.’’ தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுதணிந்து. என்று பெரிய புராணத்தில் வருவனவற்றைக் காண்க. r