பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெரிய புராண விளக்கம்-2

பிறகு உள்ள 31-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

தம்முடைய வயிற்றிலிருந்து சரிந்து விளங்கும் பஞ்ச கச்ச வேட்டி, பழமையை மிகுதியாக எடுத்துக்காட்ட, தாம் உடுத்துக்கொண்டிருப்பதாகிய நழுவும் ஆடை நிரம்பி எழிலைக் கொண்டு விளங்க, வெண்மையான மெல்லிய ஆடையோடு, தருப்பைப் புல்லை முடிந்து விட்டிருக்கும் மூங்கில் தடியைத் தம்முடைய ஒரு கையில் ஊன்றிக் கொண்டு, வீரக்கழலைப் பூண்ட திருவடிகள் தள்ளாடும் நடையை மேற்கொண்டிருக்க. பாடல் வருமாறு:

"பண்டிசரி கோவண உடைப்பழமை கூரக்

கொண்டதொர் சழங்கலுடை ஆர்ந்தழகு கொள்ள வெண்துகி லுடன்குசை முடிந்துவிடு வேணுத் தண்டொருகை கொண்டுகழல் தள்ளுநடை கொள்ள.”

இந்தப் பாடலும் குளகம். பண்டி-வயிற்றிலிருந்து. சரி. சரியும்; தாழும். கோவண உடை-பஞ்சகச்ச வேட்டி. ப்:சந்தி. பழமை-பழமையை. கூர-மிகுதியாக எடுத்துக் ஆாட்ட, க்:சந்தி. கொண்டது-தாம் உடுத்துக்கொண்ட தாகிய, ஒர்-ஒரு. சழங்கல்-தழுவுதலை உடைய. உடை-இடுப்பில் உடுத்துக்கொண்ட ஆடை. ஆர்ந்துஇடுப்பில் நிரம்பி. அழகு கொள்ள-எழிலைக் கொண்டு இதழ. வெண்-வெண்மையான துகிலுடன்-மெல்லிய துணியோடு. குசை-தருப்பைப்புல்லை. முடிந்துவிடுமுடிந்துவிட்ட வேணுத் தண்டு-மூங்கில் தடியை. ஒரு கைஒப்பற்ற வலக்கையால். கொண்டு-ஊன்றிக்கொண்டு. கழல்-வீரக் கழலைப் பூண்ட திருவடிகள் ஆகுபெயர்: ஒருமை பன்மை மயக்கம். கழல்’ என்பது முழங்காலுக்குக் கீழே பாதத்துக்கு மேலே அணியும் ஒரு வகை அணிகலன், இதை வீரக்கழல், வெற்றிக்கழல் என்றும் கூறுவர். தள்ளுதள்ளாடி நடக்கும். நடை-நடையை. கொள்ள-கொண் டு:

திகழ.