தடுத்தாட்கொண்ட புராணம் - $1.
கோவண உடை கோவண ஆடையும் நீற்றுப் பூச் சும். ’, அரைகெழு கோவன ஆடையின்மேல்.’’, 'கோவணமும் உ ைழ யி ன் ன த ளு ம் உ ைட ஆடையர்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாரும், கோவணத் துடையான் குடமூக்கிலே.’’, உடை யர் கோவணம்.’’ , துன்னக் கோவணச் சுண்ணவெண் னிறனி... புகலூரரோ. , * அரையார் கோவன ஆடையன்.’’, ’துன்னம் சேர் கோவணத்தாய்’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், கோவண்மேற் கொண்ட வேடம். , ' கீளார் கோவணமும்.’’, அரைவிரி கோவ ணத்தோ டரலார்த்து. எ ன்று சு ந் தர மூர் த் தி நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க. -
பிறகு வரும் 32-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:
‘மிகுதியாக அமைந்து வளரும் பெரிய எழில் முதுமையை அடைந்த திருவுருவமோதான்? அத்தகைய தன்மையைப் பெற்ற முதுமைப்பருவம் என்னும் அதனுடையதிருவுருவமோ தான்? உண்மையாக விளங்கியுள்ள வழியாகிய வைதிகம் உண்டான முதல் பரம்பொருள்தானோ? இந்தப் பான்மை யைப் பெற்ற முதிய வேடம்’ என்று பார்த்தவர்கள் சந்தே கத்தை அடையும் வண்ணம் திருமணப் பந்தலை அடைந்து.' பாடல் வருமாறு: .
மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ?
அத்தகைய மூப்பெனும் அதன்படிவ மேயோ?) மொய்த்தநெறி வைதிகம் விளைந்தமுத லேயோ? இத்தகைய வேடம்என ஐயமுற எய்தி.’’
இந்தப் பாடலும் குளகம். இத்தகைய-இந்தத் தன் மையை உடைய வேடம்-இவருடைய வேடம். மொய்த்துதம்மை அண்டி. வளர்-வளரும். பேரழகு-பெரிய எழில். மூத்த-முதுமையை அடைந்த வடிவேயோ-திருவுருவமோ,