பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பெரிய புராண விளக்கம்-2

அத்தகைய-பலரும் கூறும் அந்த இயல்பை உடைய.

மூப்பு-முதுமை. எனும்-என்று சொல்லப்படும்; இடைக் குறை. அதன்.அந்த முதுமைப் பருவத்தினுடைய படிவ

மேயோ-வடிவந்தானோ. மெய்த்த-உண்மையாக உள்ள. நெறி-வழியாகிய வைதிகம் - வேதநெறி; வேதநெறி

தழைத்தோங்க.’’ என வருதல் காண்க. விளைந்த-உண்

டான. முதலேயோ-முதலாக விளங்கும் பரம்பொருள்

தானோ? என-என்று இடைக்குறை. ஐயம் உற-தம்மைப்

பார்த்தவர்கள் சந்தேகத்தை அடையும் வண்ணம். எய்தி

திருமணப் பந்தலை அடைந்து. இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந்துள்ளது.

அடுத்து உள்ள 33-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

அவ்வாறு எழுந்தருளி அழகும் பெருமையும் பெற்ற வேத விதிப்படி சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருமணச் சடங்கை ஆரம்பிக்கும் பந்தலில் நம்பியாரூரனாகிய அந்த நாயனாருக்கு எதிரில் பல வார்த்தைகளைப் பேசிக்கொண் டிருக்கும் சபையினருக்கு முன்னால் நின்று கொண்டு, நான் சுறும் இந்த வார்த்தைகளை என்னுடைய எதிரில் அமர்ந் திருக்கும் எல்லோரும் கேளுங்கள்’’ என்று முன்பு பழையவை பாக உள்ள ஆயிரம் வேதங்களைத் திருவாய் மலர்ந்தருளிய திருவாயை உடைய அந்த முதியவன். பாடல் வருமாறு:

வந்துதிரு மாமறை மணத்தொழில் தொடங்கும்

பந்தரிடை கம்பிஎதிர் பன்னுசபை முன்னின் அறிந்த மொழி கேண்மின்எதிர் யாவர்களும் என்றான் முந்தைமறை ஆயிரம் மொழிந்ததிரு வாயான்.' இந்தப் பாடலும் குளகம். வந்து-அவ்வாறு எழுந்தருளி. திரு-அழகையும். மா-பெருமையையும் பெற்ற. மணத் தொழில்-சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருமணச் சடங்கு. தொடங்கும்-ஆரம்பிக்கும். பந்தரிடை-பந்தலில் நம்பிநிம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு எதிர் .