பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 55

னான் மறை. ’’, ‘வேத நாவர். ’’, வேத நாவன்., 'மறைகொள் நாவன். ’’, ‘மறையும் பாடுதிர். , * பாடுமே ஒழியாமே நால்வே தம்மும்.’’, மறையார்ந்த வாய்மொழியான்.', 'வேதங்கள் வேள்வி பயந்தார்.’’. மறைநால்வர் விண்ணோர்க் கென்றும் வேதத்தை விரிப்ப தற்கு முன்னோ. , மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், மறை நான்கும் கல்லால் நிழற்கீழ்ப் பன்னிய எங்கள் பிரான். ’’, வேதம் ஓதி வெண்ணிறு பூசி. , மறைநான்கினையும் ஒதியன்’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், வேதமெய்ந் நூல் சொன்னவனே.”, பேசுவதும் திருவாயால் மறை.’’, அன்றால நிழற்கீழ் அருமறைகள் தானருளி. , வேத மொழியர் வெண்ணிற்றர்.’’ என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க. - -

பின்பு வரும் 34-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

என இவ்வாறு கூறிய வேதியனைக் கணக்கு இல்லாத அந்தணர்களும், திருமணச் சடங்காகிய மங்கலமான காரியத் தைப் புரிய இருந்தவனும் ஆண்சிங்கத்தைப் போன்றவனு மாகிய சுந்தரமூர்த்தியும், உங்களுடைய வரவு நல்வரவே: நீங்கள் இங்கே வந்திருப்பது நாங்கள் செய்த தவத்தின் பயனே' என்று கூறிவிட்டு, இங்கே நீங்கள் வந்துநின்றதைப் பற்றிச் சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லுங்கள்' என்று மீண்டும் கூறினார்கள்." பாடல் வருமாறு:

‘ என்றுரைசெய் அந்தணனை எண்ணில்மறை யோரும்

மன்றல்வினை மங்கல மடங்கலனை யானும் 'நன்றுமது நல்வரவு கங்கள்தவம் என்றே.

கின்றதிவண் நீர்மொழிமின் நீர்மொழிவ தென்றார்.' என்று-என. உரைசெய்-இவ்வாறு யான் கூறும் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். ' என்ற வார்த்தைகளைக் கூறிய. உரை: ஒருமை பன்மை மயக்கம். அந்தணனை