பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெரிய புராண விளக்கம்-2

வேதியனை. எண்-கணக்கு. இல்-இல்லாத கடைக்குறை. மறையோரும்-அந்தத் திருமணப் பந்தலில் அமர்ந்திருந்த அந்தணர்களும்; ஒருமை பன்மை மயக்கம். மன்றல் -திருமணமாகிய, வினை-சடங்கு என்னும். மங்கல -மங்கலமாகிய நிகழ்ச்சியைப் புரிய இரு ந் த வ னும்; திணை மயக்கம். மடங்கல்-சிங்கத்தை. அனை யானும்-போன்றவனும் ஆகிய சுந்தரமூர்த்தியும். உமதுஉங்களுடைய. நல்வரவு-நல்ல வருகை. நன்று-நல்லது, நங்கள்-நீங்கள் இங்கே இப்பொழுது வந்தது நாங்கள் செய்த. தவம்-தவத்தின் பயன்; ஆகுபெயர். என்று-என்று கூறி. ஏ:அசைநிலை. இவண்-இந்தத் திருமணப் பந்தலில், நின்றது-வந்து நின்றதற்குரிய காரணமாக, நீர்-நீங்கள். மொழிவ-சொல்ல வேண்டிய வார்த்தைகளை. நீர்தாங்கள். மொழிமின்-கூறுங்கள். என்றார்-என்று கூறி னார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

ஆடவனுக்குச் சிங்கம் உவமை: மடங்கல்போல் மொய்ம்

பினான்.', 'மாக மடங்கலும்-நாண நடந்தான்.' அரிதிற் பெ ற் ற நி ன் சிங்கவேறு.’’, :சிங்கவே றனைய வீரன்.', 'சிங்கவே றெனத்திறற் சித்தர்.'; :சிங்கமெனத் தமியன் திரிவானை. , சிங்கவே றனைய வீரச் செய்தவச் செல்வன் என்றான்.' , மடங் கலின் எழுந்து., 'மடங்கலரி யேறும் மதமால் களிறும் நாண நடந்து.', 'சிங்கவே றனையான் சொன்ன வாசகம்.’’, ‘சிங்கவேறு கடல்போல் முழங்கி. அதிகாய' னாம் சிங்கம்.','ஆளியன்ன துப்பின் வீரர். , சிங்கவே றனைய வீரர் யாவரும்.’’, சிங்கம் அன்னபோர்த் தலை வர்., 'சிங்கமும் நடுக்குறத் திருவின் நாயகன் சங்கம் ஒன் றொலித்தது. ’’, ‘சிங்க மன்னவர் ஆக்கை.’’, சிங்கவே றன்ன இலக்குவன்.”. சிங்கவே றிடியுண்டென நெடுநிலம் சேர்ந்தான்.', 'சிங்கவே றனைய வீரன் செறிகழற் பாதம்

சேர்ந்தான்.', 'ஆனி போன்றுளன் எதிர்ந்தபோது.”,