பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெரிய புராண விளக்கம்-2

தானை வேந்தர் (புறநானூறு 71:1-2) என்று வருவனவற் றைக் காண்க .

பிறகு வரும் 35-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

பின்னிய சடாபாரத்தைத் தன்னுடைய தலையிற் பெற் றவனாகிய கிருபாபுரீசனும், திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளியவரும் பெருமையையும் தகுதியையும் பெற்ற வரும் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனாரைப் பார்த்து, ஏன்னி டத்திலும் உன்னிடத்திலும் முன்பிருந்தே உள்ள சம்மதத் தால் நான் முன்னால் பெற்றதாகிய ஒரு பெரிய வழக்கைத் தீர்த்துக்கொண்ட பிறகே உன்னுடைய திருமணத்தை நீ செய்துகொள்ள முயல்வாயாக’’ என்று திருவாய் மலர்ந் தருளிச் செய்தான். பாடல் வருமாறு:

'பிஞ்ஞகனும் காவலர் பெருந்தகையை நோக்கி

என்னிடையும் கின்னிடையும் கின்றஇசை வால்யான் முன்னுடைய தோர்பெரு வழக்கினை முடித்தே கின்னுடைய வேள்வியினை முேயல்தி' என்ன.'

இந்தப் பாடல் குளகம், பிஞ்ஞகனும்-பின்னிய சடா பாரத்தைத் தன்னுடைய தலையிற் பெற்ற கிருபாபுரீசனும். நாவலர்-திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளியவரும். பெரும்-பெருமையையும். தகை-தகுதியையும் பெற்ற வரும் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனாரை. நோக்கி-பார்த்து. என்னிடையும்-எனக்கு நடுவிலும். நின்னிடையும்-உனக்கு நடுவிலும். நின்ற-திராமல் நின்றுள்ள. இசைவால்-சம்மதத் தால். யான்-நான். முன்-முன் காலத்தில் உடையதுபெற்றதாகிய ஓர்-ஒரு. பெரு வழக்கினை-பெரிய வழக்கை. முடித்தே-தீர்த்துக்கொண்ட பிறகே. நின்னுடையஉன்னுடைய. வேள்வியினை-திருமணத்தை. நீ முயல்திநீ செய்துகொள்ள முயல்வாயாக. என்ன-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. -

பின்பு உள்ள 36-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: