60 பெரிய புராண விளக்கம்-2
எல்லை-தனக்கு ஓர் எல்லையும்; வரம்பும். முடிவு-முடிவும். இல்லான்-இல்லாதவனாகிய கிருபாபுரீசன்.
முடிவு இல்லான்: கேடும்மிலர்.","துஞ்சுநாள் துறந்து.' பராய்த்துறை அந்தம் இல்ல அடிகளே.', 'அந்தம் இல்ல அளவில்ல அனேகதங் காவதம் எந்தை. , 'ஆதி அந்தம் இலா அடிகள். ’, மயேந்திரப் பள்ளியுள் அந்தமில் அழ கனை.’’, 'அந்தமும் அளவும் அறியாததோர் சந்தமால் அவர் மேவிய சாந்தமே.’’ என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும், அந்தமோ டளவிலாத அடிகள். அந்தமில்
அடிகள் போலும் ஆலங்காட் டடிக ளாரே...', 'அந்தமில் சோதி. , அந்தம் இல்லா அணிமறைக் காடரோ. , 'பிறப்போ டிறப்பென்றும் இல்லாதான்.” மூவாய்
பிறவாய் இறவாய் போற் றி.', *பிறவாதும் இறவாதும் பெருகினானை. என்று திருநாவுக்கரசு நாயனாரும், மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை
இறப்பதில்லல.’’, பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், அந்தமும் ஆதியும் அகன்றோன்.', "அழிவிலா ஆனந்த வாரி போற்றி.', 'அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி., 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை. , 'தான்.அந்தம் இல்லான், , ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே. ', அந்தமில் அமுதே., 'சாதல் சாதல் பொல் லாமை அற்ற தனிச்சரண். , 'யாதும் ஈறில்லாச் சித் தனே.’’ என்று மாணிக்கவாசகரும், இறப்பில் கடியார்
சிறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார்' என்று நக்ரே தேவ நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க. -
பிறகு உள்ள 37-ஆம் பாடலின் கருத்து வருமாறு: தேவலோகத்தில் வாழும் தேவர்களையும், திருமாலை யும், அயனையும் ஆகிய இவர்கள் முதலிய செல்வத்தில் மிக்கவர்களாகிய எல்லோரையும் வேறு வேறாகத் தன்னு டைய அடிமைகளாகப் பெற்ற அடியேங்களுடைய தலைவ