பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 61

னாகிய கிருபாபுரீசன், நான் கூறுவதை வேதியர்களே கேளுங்கள்; இந்தத் திருநாவலூர் என்னும் நகரத்தில் பிறந்த ஊரனாகிய சுந்தரமூர்த்தி என்னுடைய அடியவன்; இது தான் யான் கூறுவது' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்

தான். பாடல் வருமாறு:

'ஆவதிது கேண்மின்மறை யோர், என் அடியான்இங்

நாவல்நகர் ஊரன்,இது நான்மொழிவ. தென்றான். தேவரையும் மாலயன் முதல்திருவின் மிக்கோர் யாவரையும் வேறடிமை யாஉடைய எம்மான்.”.

ஆவது-நான் சூறவருவதாகிய: இது-இந்த வார்த் தையை மறையோர்-இந்தத் திருமணப் பந்தலில் அமர்ந் திருக்கும் வேதியர்களே, ஒருமை பன்மை மயக்கம். கேண் மின்டகேளுங்கள். என்-என்னுடைய அடியான்-அடிமை யாக உள்ளவன். இ-இந்த ந்:சந்தி. நாவல்-திருநாவலூ ராகிய நகர்-பெரிய ஊரில் பிறந்த ஊரன்-ஆரூர னாகிய சுந்தரமூர்த்தி. இது-இதுதான். நான்-யான். மொழிவது-சுறும் வார்த் ைத தேவரையும்-தேவ லோகத்தில் வாழும் தேவர்களையும்; ஒருமை பன்மை மயக்கம். மால்-திருமாலையும். அயன்-அயனாகிய பிரமதேவனையும், முதல்-இவர்கள் முதலிய. திருவின்செல்வத்தில். மிக்கோர்-மிகுதியாகப் படைத்து விளங்குபவர் கள்; ஒருமை பன்மை மயக்கம். யாவரையும்-எல்லோரை யும். வேறு-வேறு வேறாக அடிமையா-தனக்கு அடிமைக. ளாக ஒருமை பன்மை மயக்கம். உடைய-பெற்ற. எம்மான்அடியேங்களுடைய தலைவனாகிய கிருபாபுரீசன், அடியேங் கள் என்றது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களை யும் சேர்த்துப் பாடியது. என்றான்-என்று திருவாய் மலர்ந் தருளிச் செய்தான். . -

தேவரையும் மாலயன்... யாவரையும் அடிமையாக உடையவன்: 'திருமால் அடிவீழ. ,'வண்ணநன் மலருறை