62 பெரிய புராண விளக்கம்-2
மறையவனும் கண்ணனும் கழல்தொழ.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளியவற்றைக் காண்க. அடுத்து வரும் 38-ஆம் பாடலின் கருத்து வருமாறு: என்று இவ்வாறு இறைவனாகிய கிருபாபுரீசன் திரு வாய் மலர்ந்தருளிச் செய்தான்; அவன் கூறிய வார்த்தை களைக் கேட்டவர்களாக எல்லா இடங்களிலும் நின்று கொண்டிருந்தவர்களும் அமர்ந்திருந்தவர்களும் இந்த அந்த ணன் என்ன எண்ணினானோ?’ என்று கூறிக்கொண்டே எழுந்துபோய் விட்டார்கள்; அவர்கள் கோபத்தைக் கொண் டார்கள்; சிரித்தார்கள்; திருநாவலூரில் பிறந்தவனாகிய சுந்தரமூர்த்தி, இந்த வேதியன் கூறும் வார்த்தைகள் மிக நன்றாக இருக்கின்றன!' என்று கூறி அந்த அந்தணனை எதிரே பார்த்துச் சிரித்தான். பாடல் வருமாறு:
என்றான் இறையோன் அதுகேட்டவர் எம்மருங்கும் கின்றார் இருந்தார். இவன்என் கினைந்தான்கொல்:
- - - - - - எனறு சென்றார், வெகுண்டார், சிரித்தார்; திருநாவலூரான் நன்றால் மறையோன்மொழி என்றெதிர் நோக்கி
". . . . - நக்கான்.”
இறையோன்-இறைவனாகிய கிருபாபுரீசன்.என்றான். இந்தச் சுந்தரமூர்த்தி என்னுடைய அடிமை என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தான். அது-அந்த அந்தணன் கூறிய வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். கேட்டவர்கேட்டவர்களாக, ஒருமை பன்மை மயக்கம். எம்மருங்கும்எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். நின்றார்நின்றுகொண்டிருந்தவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். இருந்தார் - அமர்ந்துகொண்டிருந்தவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். இவன்-இந்த முதிய அந்தணன். என்என்ன. நினைத்தான்-எண்ணினான். கொல். அசைநிலை என்று-என்று கூறிக்கொண்டே. சென்றார் - அந்தத்