தடுத்தாட்கொண்ட புராணம் 63.
திருமணப்பந்தலிலிருந்து எழுந்து போய் விட்டார்கள்; ஒருமை பன்மை மயக்கம். வெகுண்டார்-போகும்பொழுது அவர்கள் கோபத்தை அடைந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். சிரித்தார்-பிறகு சிரித்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். திருநாவலூரான்-திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளிய சுந்தரமூர்த்தி. மறையோன்-இந்த அந்தணன். மொழி-கூறிய வார்த்தைகள்; ஒருமை பன்மை மயக்கம், நன்று நன்றாக உள்ளன. ஒருமை பன்மை மயக்கம் நன்றாக இல்லை என்பது அவனுடைய எண்ணம்; ஆல். அசைநிலை. என்று-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து. எதிர்-அந்த அந்தணனை அவனுடைய எதிரில்.நோக்கிபார்த்து. நக்கான்-சிரித்தான். - - -
பிறகு வரும் 39-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: எல்லாத் தேவர்களுக்கும் மேலாகிய தேவனாகிய கிருபா புரீசன் அவ்வாறு சிரித்த சுந்தரமூர்த்தியினுடைய முகத்தைப் பார்த்து நடுக்கத்தை அடைந்து ஒடுங்கிக்கொண்டு தன்னு டைய தோளின்மேல் போட்டுக்கொண்டிருந்த உத்தரீய மாகிய மெல்லிய ஆடையைத் தன்னுடைய கையில் எடுத்துக் கொண்டு சுந்தரமூர்த்திக்கு முன்னால் சென்று, அந்தப் பழைய காலத்தில் உன்னுடைய தந்தையினுடைய தந்தை யாகிய பாட்டன் எனக்கு எழுதிஅளித்த அடிமை ஒலை இது, நான் கூறிய இந்த அடிமை வேலையைக் கேட்டு இன்றைக்கு நீ நகைத்தது ஏன் அடா?' என்று திருவாய்மலர்ந்தருளிச் செய்ய. பாடல் வருமாறு:
'கக்கான் முகம்நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசையுத் தரியத்துகில் தாங்கி மேற்சென் றக்காலம் உன்தந்தை தன்தந்தை ஆள்ஓலை ஈதால், இக்காரி யத்தைt இன்று சிரித்ததென் ஏட!’ என்ன.' இந்தப் பாடல் குளகம். யார்க்கும்-எல்லாத் தேவர் களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மிக்கான்-மேலாக,