2:64 - - பெரிய புராண விளக்கம்-2
விளங்கும் தேவனாகிய கிருபாபுரீசன்.நக்கான்-அவ்வாறு சிரித் தவனாகிய சுந்தரமூர்த்தியினுடைய. முகம்-திருமுகத்தை நோக்கி-பார்த்து. நடுங்கி-நடுக்கத்தை அடைந்து. நுடங்கி -ஒடுங்கிக்கொண்டு. மிசை-தன்னுடைய தோளின்மேல் போட்டுக்கொண்டிருந்த உத்தரிய-அங்கவஸ்திரமாகிய. த்:சந்தி. துகில்-மெல்லிய ஆடையை. தாங்கி-தன்னு டைய கையில் எடுத்துக்கொண்டு. மேல்-சுந்தரமூர்த்திக்கு முன்னால். சென்று-போய். அக்காலம்-அந்தப் பழைய காலத்தில்; அ:பண்டறி சுட்டு. உன்-உன்னுடைய தந்தை தன்-தந்தைக்கு; தன்: அசைநிலை. தந்தை-தந்தையாகிய பாட்டன். ஆள்-எனக்கு எழுதித்தந்த அடிமை. ஒலைாதுஇது ஒலை. ஆல்:அசைநிலை.இக்காரியத்தை-இந்த அடிமை வேலையைக் கேட்டு. நீ இன்று-நீ இன்றைக்கு. சிரித்ததுநகைத்தது. என்-ஏன், ஏட-அடா. என்ன-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய.
யார்க்கும் மிக்கான்: இமையோர்கள் எங்கள் உச்சி எம்இறைவன் என்றடியே இறைஞ்ச .' , ' தேவர் தேவர் திரிசூலத்தர்.’’, விண்ணோர் பெருமானே. என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், தேவர்கள் தேவர் போலும்.’’, விண்ணினார் விண்ணின் மிக்கர். , * தேவர்கள்தம் கோனை.’’, விண்ணுலகின் மேலார்கள் மேலான்.' வினோர் பெருமானை,, 'வானவன்காண் வானவர்க்கும் மேலா ளான்காண்’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதி யனை.', 'விண்ணோர் முழுமுதல்.’’, ‘வானவன் மாலயன் மற்றுமுள தேவர்கட்கும் கோன். , எம்பெரு மான் தேவர் பிரான்., 'உம்பர்கட் கரசே.', தேவ தேவன்மெய்ச் சேவகன்.’’ , யாவர்க்கும் மேலாம் அளவி லாச் சீருடையான்' என்று மாணிக்க வாசகரும் பாடியருளி யவற்றைக் காண்க.)