பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 65

அடுத்து வரும் 40-ஆம் பாடலின் கருத்து வருமாறு: சிறிதளவும் குற்றம் இல்லாத பரம்பரையில் திருவவ தாரம் செய்தருளிய சுந்தரமூர்த்தி நாயனார் அந்த அந்தணனைப் பார்த்து, நட்பு முன்னால் அமைந்திருந்த தம் முடைய திருவுள்ளத்தில் உண்டான நெகிழ்ச்சியினால் தாம் சிரித்த சிரிப்பை விட்டு விட்டு, குற்றம் இல்லாத வேதியர் கள் வேறு ஒரு வேதியருக்கு அடிமையாக ஆவதை நீ சொல்ல இன்றுதான் கேட்டோம். அந்தணனே, நீ பித்துப் பிடித்த வனோ?’ என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.’ பாடல் வருமாறு:

மாசிலா மரபில் வந்த வள்ளல்வே தியனை நோக்கி நேசம்முன் கிடந்த சிங்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி ஆசில்அங் தணர்கள் வேறோர் அந்தணர்க்கடிமை ஆதல் பேசஇன்றுன்னைக் கேட்டோம்; பித்தனோ மறையோன்' - என்றார். ' மாசு-சிறிதளவும் குற்றம். இலா-இல்லாத இடைக் குறை. மரபில்-சிவாசாரியர்களுடைய பரம்பரையில். வந்த -திருவவதாரம் செய்தருளிய. வள்ளல்-வள்ளலாகிய சுந்தரமூர்த்தி நாயனார். வேதியனை-அந்த முதிய அந்த ணனை. நோக்கி-பார்த்து. நேசம் முன்-இப்போது பிறந்த தற்கு முன்னால் இருந்த நட்பு. கிடந்த-அமைந்திருந்த, சிந்தை-தம்முடைய திருவுள்ளத்தில் உண்டான. நெகிழ்ச்சி யால்-உருக்கத்தால். சிரிப்பு-தாம் நகைத்த சிரிப்பை, நீங்கிடவிட்டுவிட்டு. ஆசு-குற்றம் இல்-இல்லாத கடைக் குறை. அந்தணர்கள்-வேதியர்கள். வேறு ஓர்-வேறு ஒரு. அந்தணர்க்கு-வேதியருக்கு. அடிமை ஆதல்-அடிமையாக ஆவதை. பேச இன்று-இன்றைக்கு நீ கூறியதனால்தான். உன்னை-உன்னுடைய வார்த்தைகளை; ஆகுபெயர். துே. டோம்-நானும் இங்கே அமர்ந்திருக்கும் வேதியர்களும் கேள் 'விப்பட்டோம். மறையோன்-அந்தணனே. பித்தனோ-நீ

பெ.-2-5 .