பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெரிய புராண விளக்கம்-2

பித்துப் பிடித்தவனோ. என்றார்-என்று திருவாய்மலர்ந்: தருளிச் செய்தார்.

வள்ளல்: வருமணக் கோலத் தெங்கள் வள்ள லார்’ (27) என்று முன்பு வந்ததையும், சுந்தரமூர்த்தி நாயனாரை வள்ளல் என்று குறிப்பிடுவதைக் காட்டும் இடங்களையும் கண்டு உணர்க. -

அடுத்து வரும் 41-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: - நான் பித்துப் பிடித்தவனாகவும் இருக்கட்டும்; மேலும் பேய் பிடித்தவன் ஆகவும் இருக்கட்டும்; நீ என்னைப் பார்த்து இன்றைக்கு எவ்வளவு அடாத வார்த்தைகளைக் கூறினாலும் அந்த வார்த்தைகளால் நான் வெட்கத்தை அடைய மாட்டேன்; அவ்வளவு நீ பேசியதற்குக் காரணம் என்னை நீ சிறிதளவும் தெரிந்து கொள்ளவில்லை; அவ்வா றானால் நீ இங்கே நின்றுகொண்டு பரிகாசமான வார்த்தை, களைக் கூற வேண்டாம்; நீ எனக்கு அடிமையாக இருந்து நான் கட்டளையிட்ட வேலைகளைப் புரியவேண்டும்’ என்று அந்தக் கிருபாபுரீசர் திருவாய் மலர்ந்தருளிச் செய் தார். பாடல் வருமாறு: --

  • பித்தனும் ஆகப் பின்னும் பேய்னும் ஆக இேன்

றெத்தனை தீங்கு சொன்னால் யாதும்மற் றவற்றால்

நானேன்; அத்தனைக் கென்னை ஒன்றும் அறிந்திலை யாகில் கின்று. வித்தக பேச வேண்டாம்; பணிசெய வேண்டும். '

- எனறாா. பித்தனும்-நான் பித்துக் கொண்டவனாகவும். ஆகஇருக்கட்டும். ப்:சந்தி. பின்னும்-மேலும். பேயனும் ட ‘பேய் பிடித்தவனும். ஆக-ஆக இருக்கட்டும். நீ இன்றுநீ இன்றைக்கு. எத்தனை-எவ்வளவு. தீங்கு-தகாத தீய வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். சொன்னால்கூறினாலும். யாதும்-ஏதும். மற்று: அசை நிலை. அவற் றால்-அந்த வார்த்தைகளால். நாணேன்-நான் வெ.