பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 67

கத்தை அடையமாட்டேன். அத்தனைக்கு-அந்த அளவு என்னை நீ பரிகாசம் செய்து பேசியதற்கு, என்னை-இங்கே வந்த என்னை. ஒன்றும்-ஒரளவும். அறிந்திலை-நீ தெரிந்துகொள்ளவில்லை. ஆகில்-ஆனால். நின்று-இங்கே நின்று கொண்டு. வித்தகம் -பரிகாச வார்த்தைகளை; ஒருமை பன்மை மயக்கம். பேச வேண்டாம்-நீ கூற வேண் டாம், பணி-எனக்கு அடிமையாக இருந்துகொண்டு யான் இட்ட வேலைகளை ஒருமை பன்மை மயக்கம். செயபுரிய, இடைக்குறை. வேண்டும் என்றார்-வேண்டும் என்று கிருபாபுரீசர் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

பிறகு வரும் 42-ஆம் பாடலின் கருத்து வருமாறு: * யான் பார்ப்பதாகிய இவருடைய ஒரு கோலத்தர்ல் என்னுடைய உள்ளம் இவரிடம் விருப்பத்தை உண்டாக்கி உருக்கத்தை அடையும்; இவருடைய திருவாய் பேசிக் கொண்டு வரும் ஒப்பற்ற பைத்தியக்காரத்தனமான வார்த் தைகள் சினத்தையும் அதனோடே உண்டாக்கும்; இவர் ஒர் அடிமை ஒலை இருக்கிறது என்று கூறும் அந்த வார்த்தைகளி னுடைய உண்மையை நான் தெரிந்து கொள்வேன்.’’ என்று எண்ணித் தொண்டராகிய சுந்தரமூர்த்தி நாயனார்: துணைவராக வந்த கிருபாபுரீசரிடம், எங்கே, அந்த அடிமை ஒலையை எனக்குக் காட்டுவாயாக." என்று திரு. வாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு:

கண்டதோர் வடிவால் உள்ளம் காதல்செய் துருகா கிற்கும்

கொண்டதோர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்; உண்டொராள் ஒலை என்னும் அதன்உண்மை அறிவேன்

• என்று

தொண்டனார், ஒலை காட்டு கென்றனர் * -

- துணைவ னாரை.’’

கண்டது-நான் பார்த்ததாகிய, ஓர்-இவருடைய ஒப்பற்ற வடிவால்-கோலத்தால். உள்ளம்-என்னுடைய உள்ளம். காதல்-இவரிடம் விருப்பத்தை செய்து-உண்