பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பெரிய புராண விளக்கம்-2

டாக்கி, உருகா நிற்கும்-உருக்கத்தை அடைந்து நிற்கும். கொண்டது-இவர் தம்முடைய திருவாயால் பேசிக்கொண்டு வரும். ஒர்-ஒப்பற்ற, பித்த-பைத்தியக்காரத்தனமான, வார்த்தை-வார்த்தைகள்: ஒருமை பன்மை மயக்கம். கோபமும்-இவரிடம் எனக்குச் சினத்தையும். உடனேஅந்த விருப்பத்தோடே. ஆக்கும்-உண்டாக்கும். ஒர் ஆள்-ஒர் அடிமை. ஒலை உண்டு-ஒலை என்னிடம் இருக் கிறது. என்னும்-என்று இவர் கூறும். அதன்-அந்த வார்த்தைகளில் உள்ள ஒரும்ை பன்மை மயக்கம். உண்மைஉண்மையை. அறிவேன்-நான் தெரிந்து கொள்வேன். என்று-என எண்ணி. தொண்டனார்-திருநாவலூர் அர னுடைய திருத்தொண்டராகிய சுந்தரமூர்த்தி நாயனார். துணைவனாரை-துணைவராக எழுந்தருளிய கிருபாபுரீசரி டம்; உருபு மயக்கம். ஒலை-அந்த அடிமை ஒலையை. காட் டுக.என்னிடம் காண்பிப்பாயாக. என்றனர்-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

அடுத்து உள்ள 43-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த அடிமை ஒலையைக் காட்டுவாயாக என்று நம்பியா

ரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச்

செய்ய, நீ அந்த அடிமை ஒலையைப் பார்ப்பதற்குத் தகுதி

யைப் பெற்றிருக்கிறாயோ? நான் அந்த ஒலையை நியாய சபையில் உள்ள சான்றோர்களுக்கு முன்னால் காண்பிக்க, நீ

எனக்கு அடிமையாக யான் இட்ட வேலைகளைப் புரியத்

கடமைப்பட்டிருக்கிறாய்' என்று கிருபாபுரீசர் திருவாய்

மலர்ந்தருளிச் செய்த சமயத்தில் நாவலாரூரர் ஆகிய

அந்த நாயனார் கோபத்தை அடைந்து வேக, மாகப் போய்த் திருமாலும், அயனாகிய பிரமதேவனும்

தொடர முடியாதவனாகிய கிருபாபுரீசனை வலிமையாகச்

சென்று அவனுக்குப் பின்னால் தொடர்ந்து எழுந்தருளலா

னார். பாடல் வருமாறு: