தடுத்தாட்கொண்ட புராணம் . 69
ஒலைகாட் டென்று நம்பி உரைக்க, நீ ஒலை காணற் பாலையோ? அவைமுன் காட்டப் பணிசெயற் பாலை'என்ற வேலையில் காவலூரர் வெகுண்டுமேல் விரைந்து சென்று மாலயன் தொடரா தானை வலிந்துபின் தொடர லுற்றார்." ஒலை-அந்த அடிமை ஒலையை. காட்டு-எனக்குக் காண் பிப் பாயாக. என்று-என நம்பி-நம்பியாரூரராகிய சுந்தர மூர்த்திநாயனார். உரைக்க-திருவாய் மலர்ந்தருளிச் செய்ய நீ ஒலை-நீ அந்த அடிமை ஒலையை காணற்பாலையோபார்ப்பதற்குத் தகுதியை உடையாயோ. அவை-திரு வெண்ணெய் நல்லூரில் உள்ள நியாய சபையில் அமர்ந்திருக் கும் அந்தணர்களுக்கு இட ஆகு பெயர். முன்-முன்னால். காட்ட-யான் காண்பிக்க. ப்:சந்தி. பணி-யான் இடும் வேலைகளை ஒருமை பன்மை மயக்கம். செயற்பாலைபுரிவதற்குக் கடமைப் பட்டிருக்கிறாய். என்ற-என்று கிருபாபுரீசர் திருவாய் மலர்ந்தருளிச் செய்த வேலையில்சமயத்தில். நாவலூரர்-திருநாவலூரில் திருவவதாரம் புரிந்தருளிய அந்த நாயனார். வெகுண்டு-கோபத்தை அடைந்து. மேல்-கிருபாபுரீசரிடம். விர்ைந்து-வேகமாக. சென்று-போயருளி. மால்-திருமாலும். அயன்-அயனா கிய பிரமதேவனும். தொடராதானை-பன்றி உருவத்தை எடுத்துக்கொண்டும் அன்னப் பறவையின் வடிவத்தை எடுத்துக்கொண்டும் நிலத்தைத் தோண்டியும், ஆகாயத்தில் பறத்தும் திருவடிகளையும் திருமுடியையும் தேடிப் பார்த்தும் தொடர்வதற்கு முடியாத கிருடாபுரீசனை. இந்தக் கருத் தைப் புலப்படுத்தும் இடங்களை வேறோரிடத்தில் கூறி னோம்; ஆண்டுக் கண்டுணர்க. வலிந்து-வலுக்கட்டாய மாக. பின்-அவனுடைய பின்னால். தொடரலுற்றார்தொடர்ந்து எழுந்தருளவானார். - பின்பு வரும் 44-ஆம் பாடலின் கருத்துவருமாறு:
அவ்வாறு அந்த அடிமை ஒலையைக் கிருபாபுரீசரிட மிருந்து பறித்துக்கொள்ளும்பொருட்டு வேகமாகச் சுந்தர மூர்த்தி நாயனார் போன சமயத்தில், அந்த வேதியனாக