பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பெரிய புராண விளக்கம்-2

வந்த கிருபாபுரீசர் திருமணப் பந்தலுக்குள் ஒடிப் போக, வேகமாக அவருடைய பின்னால் தொடர்ந்து சென்று நம்பி யாரூரராகிய அந்த நாயனார் செந்தாமரை மலரைப்போன்ற நிறத்தைப் பெற்றவராகிய கிருபாபுரீசரை அடைந்தார்; அந்த நாயனாரை அல்லாமல் மூன்று புரங்களை அழித்த அம்பையும், பொன்நிறத்தைக் கொண்ட மேரு மலையாகிய வில்லையும் பிடித்தவராகிய கிருபாபுரீசரைத் தொடர்ந்து சென்று எட்டிப் பிடிக்க வல்லமையைப் பெற்றவர் யார்? பாடல் வருமாறு:

'ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்த ணாளன் காவணத் திடையே ஓடக் கடிதுயின் தொடர்ந்த நம்பி பூவணத் தவரை உற்றார்; அவரலால் புரங்கள் செற்ற ஏவணச் சிலையி னாரை யார்தொடர்ந் தெட்ட வல்லார்.’’

ஆவணம்-அந்த அடிமை ஒலையை. பறிக்க-கிருபா புரீசரிடமிருந்து பறித்துக்கொள்ளும் பொருட்டுச் சுந்தர மூர்த்தி நாயனார். ச் சந்தி. சென்ற-அவரைத் தொடர்ந்து பின்பற்றிப் போன. அளவினில்-சமயத்தில். அந்தணாளன் -வேதியனுடைய கோலத்தோடு எழுந்தருளி வந்த கிருபாபுரீசன். காவணத்து-திருமணப் பந்தலின். இடைநடுவே. ஏ:சந்தி. ஒட-ஓடிப்போக. க்சந்தி. கடிதுவேகமாக. பின்-பின்னால். தொடர்ந்த-தொடர்ந்து அவரைப் பின்பற்றி எழுந்தருளிய. நம்பி-நம்பியாரூரராகிய அந்த நாயனார். பூ-செந்தாமரை மலரைப் போன்ற. வணத்தவரை-நிறத்தைப் பெற்ற கிருபாபுரீசரை. உற்றார்அடைந்தார். அவர்-அந்த நாயனார். அலால்-அல்லாமல்; இடைக்குறை. புரங்கள்-தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களை. செற்ற-அழித்த. ஏ-திருமாலாகிய அம்பையும். வண-பொன் நிறத்தைக் கொண்ட ச்: சந்தி. சிலையினாரை-மேரு மலையாகிய வில்லை ஏந்திய கிருபாபுரீசரை. தொடர்ந்து-பின்பற்றிச்