பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 71

சென்று. எட்ட-எட்டிப் பிடிக்க வல்லார்-வல்லமையைப்

பெற்றவர், யார்-யார் இருக்கிறார்.

செந்தாமரை மலரைப் போன்ற நிறத்தைப் பெற்ற

வர்: பூந்தாமரை மேனி.’’, 'பூவணத்தவன்., ‘பூவின் நிறத்தானுமாம். என்று திருநாவுக்கரசு நாய னாரும், செந்தாமரைக் காடனைய மேனித் தனிச் சுடரே.', செங்கமலப் பைம்போதால் ... எங்கோனும்

போன்று.” என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

மேருமலையை வில்லாக ஏந்தியவன்: 'பெரிய மேருவரை சிலையாமலை வுற்றார் எயில்மூன்றும்., * விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறவரக்கர்

குலங்கள் வாழும் ஊர்எரித்த கொள்கை.', 'இரும் பொன்மலை வில்லா எரி அம்பா நாணில் திரிந்த புரம் மூன்றும் செற்றான். , 'மால்வரையே வில்லாக எரி

கணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்.’’, * மாமேரு வில்லா நாண் அரவா அனலெரி அம்பாப் பொருது மூவெயில் செற்றவன்.', விலங்கவே சிலை.’’, விலங்கல் ஒன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான்.', 'மருவ லார் திரிபுரம் எரிய மால்வரை பருவிலாக் குனித்த பைஞ்ஞ்லி மேவலான். ', 'வில்மால் வரையா மதிலெய்து, ', வில் மலை நாண்அரவம் மிகு வெங்கனல் அம்பதனால் புன்மை செய் தானவர்தம் புரம்பொன்று வித்தான்.', 'திரியும் புரம் மூன்றையும் செந்தழல் உண்ண எரியம் பெய்த குன்றவில்லி.’’ என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாய னாரும், கல்வினார் புரம் மூன்றெய்த கடவுளை., * கற்றுணை வில்லதாகக் கடியரண் செற்றார்.’’, ‘அயிலார் அம்பெரி மேரு வி ல் லா க .ே வ எயிலாரும் பொடி யாய் விழ எய்தவன்.” என்று திருநாவுக்கரசுநாயனாரும், 'வன்ன்ாகம் நாண்வரைவில் அங்கிகணை அரிபகழி தன் ஆகம் உறவாங்கிப் புரம்எரித்த தன்மையனை.", :புரிசை மூன்றையும் பொன்றக் குன்றலில் ஏந்தி."