பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெரிய் புராண விளக்கம்-2

என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் பர்டியருளியவற்றைக் காண்க. நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம், பாணந்தான் மண்தின்ற பாணமே-தானுவே, சீராரூர் மேவும் சிவனேவில் வாளிஎங்கன், நேரார் புரமெரித்தாய்நீ.’’ என்று வரும் தனிப்பாடலையும் காண்க.

பின்பு உள்ள 45-ஆம் பாடலின் கருத்து வருமாறு: வேதங்கள் ஆனவை முன் ஒரு காலத்தில் வாழ்த்திச் செந்தாமரைமலர்களைப் போன்ற திருவடிகளைப் பற்றிக் கொண்டு நின்ற இறைவனாகிய கிருபா புரீசனைப் பின் தொடர்ந்து சென்று சுந்தரமூர்த்திநாயனார் பிடித்துக் கொண்டு, எழுதப்பட்டிருக்கும் அடிமை ஒலையைத் தம்) முடைய கைகளில் வாங்கிக் கொண்டு, ஒலிக்கின்ற விரக் கழலைப் பூண்ட திருவடிகளைப் பெற்றவனும் பெருமையை உடையவரும் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார், அடிமை யாகி வேதியர் பணிகளைப் புரிதல் என்ன நியாயம்?" என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து அந்த ஒலையைக் கிழித்துப் போட்டு விட்டார்; முடிவே இல்லாதவனாகிய கிருபாபுரீசன் முறையிட்டருளினான். பாடல் வருமாறு:

'மறைகள்ஆ யினமுன் போற்றி மலர்ப்பதம் பற்றி கின்ற இறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும்ஆள் ஒலை

- வாங்கி அறைகழல் அண்ணல், ஆளாய் அந்தணர் செய்தல்

எனன. முறை?"எனக் கீறி இட்டார் முறையிட்டான் முடிவி - - . லாதான்.”

மறைகள்-வேதங்கள். ஆயின-ஆனவை. முன்-முன்பு ஒரு காலத்தில். போற்றி-வாழ்த்தி. மலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பதம்-திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம். பற்றிபிடித்துக் கொண்டு. நின்ற-நிலையாக நின்று விளங்கிய. இறைவனை-எங்கும் நிறைந்தவனாகிய கிருபாபுரீசனை: