தடுத்தாட்கொண்ட புராணம் 73.
த்:சந்தி. தொடர்ந்து-பின் தொடர்ந்து சென்று. ஆள்அடிமை. ஒலை-ஒலையை வாங்கி-தம்முடைய கைகளில் வாங்கிக்கொண்டு. அறை-ஒலிக்கும். கழல்-வீரக்கழலைப் பூண்ட திருவடிகளைப் பெற்ற; ஆகுபெயர்; ஒருமை பன்மை மயக்கம். கழல் இன்னதென்பதை வேறோரிடத். தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. அண்ணல்-பெரு மையைப் பெற்றவராகிய சுந்தரமூர்த்தி நாயனார். ஆளாய்அடிமையாகி. அந்தனர்-வேதியர். செய்தல்-பணிகளைப் புரிதல். என்ன முறை-என்ன நியாயம்.எனி-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து இடைக்குறை. க், சந்தி. கீறி-அந்த அடிமை ஒலையைக் கிழித்து. இட்டார்-போட்டுவிட்டார். முடிவு-அந்தம்; மரணம். இலாதான்-இல்லாதவனாகிய கிருபாபுரீசன், இடைக்குறை. முறையிட்டான்-ஒலமிட் டருளினான். -
மறைகள் போற்ற நின்றவர்: கழல் நாடொறும் பேணி ஏத்த மறையுடையான்.’’, ‘மறைவழி வழிபடு மறை வன்.’’, சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும். மைந்தா.', 'மறை வழிபட்ட...செல்வா.’’, ‘வேதம் பல .. வியந்தடி போற்ற. , "மந்திர மறையவை. வழிபட நின்ற எம்இறை.', 'முன்னை நான்மறையவை முறைமுறை குறையொடும் தன்னதாள் தொழுதெழ நின்றவன்.' என்று திருஞான சம்பந்த மூர்த்திநாய னாரும், வேதங்கள் ஐயா எனஓங்கி.", என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க. - : .
எங்கும் நிறைந்தவன். நிலனொடு வானும் நீரொடு:
தியும் வாயு மாகி ஒரைந்து புலனொடு. ’’, 'பல்கதிரோன் மதிபார் எற்றுநீர் தீக்காலும் மேலை விண் இயமான னோடு மற்று மலதோர் பல்லுயிராய்.”, நீருளான்
தீயுளான் அந்தரத் துள்ளான். ’’, மறையவன் உலகவன் மாயமவன் பிறையவன் புனலவன் அனலுமவன் இறைய வன்.”, 'மண்புனல் அனலொடு மாருதமும் விண்புனை மரு.