தடுத் தாட்கொண்ட புராணம் 75
நான்கை வயங்கெரியில் மூன்றை மாருதத் திரண்டை விண்ணதனில் ஒன்றை விரிகதிரைத் தண்மதியைத் தாரகை
கள் தம்மின் மிக்க எண்ணதனில் எழுத்தை., 'ஒன்றா உலகனைத்தும் ஆனார் தாமே நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர்வளிதி ஆகாசம் ஆனார் தாமே.', 'விண்ணாகி
நிலனாகி விசும்பு மாகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற எண்ணாகி எழுத்தாகி,’, எத்திக்கு மாய்நின்ற இறைவன்.', இருநிலனாய்த் தியாகி நீரு மாகி இயமான ளாய் எரியும் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகிப் பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவும் தம்முருவும் தாமே யாகி நெருகலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர்டின் சடையடி கள் நின்ற வாறே. , 'காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க் கனவாகி நனவாகிக் கங்கு லாகி.’, ‘தீயாகி நீராகித் திண்மை யாகித் திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித் தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித் தாரகையும் ஞாயிறும்தண் மதியு மாகி. , என்று திரு நாவுக்கரசு நாயனாரும், மண் நீர் தீவெளி கால் வரு பூதங்கள் ஆகி மல்கும் பெண்ணோடா னலியாய்.’’, என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், 'பாரிடை ஐந்தாய்ப்பரந் தாய் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி, தியிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி, வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி, வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி.’’, வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையு மாய்....நின்றாயை. , பெண்ணாகி ஆனாய் அவியாய்ப் பிறங்கொளிசேர், விண்ணாகி மண்ணாகி.’’, 'பூதங்கள் தோறும் நின்றாய்” என்று மாணிக்க வாசகரும் பாடியருளிய வற்றைக் காண்க. -
பிறகு வரும் 46-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன