பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 77

திணை மயக்கம். முனிவரே நீர்-முனிவரே நீங்கள். எங்கு -எந்த் ஊரில், உளிர்-வாழ்கிறீர் இடைக்குறை. செப்பும் -அதைக் கூறுங்கள். என்றார்-என்று கூறினார்கள்; ஒருமை பன்மை மயக்கம். --

ഥങ്ങഈ அறிவதற்கரியான்: மறையிலிறுமுன் தொடரொ னாத நீ.', 'நான்மறையும்...தாமறியாச் சேவேறு சேவடிக்கே.', ' பண்டாய நான்மறையும்....கண்டாரும் இல்லை' என்று மாணிக்கவாசகர் பாடியருளியவற்றைக் ஆாண்க. - -

அடுத்து உள்ள 47-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அவ்வாறு அவருடைய பக்கத்தில் நின்றுகொண்டிருந்த வர்கள் கேட்டவுடன் நின்றுகொண்டிருந்த யாவருக்கும் தந்தையாரைப் போன்ற கிருபாபுரீசர், "நான் இந்த ஊரில் தான் இருக்கிறேன்; என்னுடைய இல்லமும் நெடுந்துாரத்தில் இருப்பது அன்று; இந்த வெண்ணெய் நல்லூர்தான்; அது இருக்கட்டும்; தரும வழி இல்லாமல் வலுக்கட்டாயத்தைப் புரிந்து என்னுடைய கையில் வைத்திருந்த அடிமை ஒலையை வலிந்து வாங்கிக்கொண்டு நின்ற இந்தச் சுந்தரமூர்த்தி அதைக் கிழித்துப் போட்டுவிட்டுத் தானே என்னுடைய அடிமை என்பதை நிருபித்துவிட்டான்' என்று கிருபாபுரீசன் திருவாய் மலர்ந்தருளிச் செய்தான். பாடல் வரும்ாறு: என்றலும் கின்ற ஐயா, இங்குளேன், இருப்பும் சேய தன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க, அறத்தா றின்றி வன்றிறல் செய்தென் கையில் ஆவணம் வலிய வாங்கி கின்றிவன் கிழித்துத் தானே கிரப்பினான் அடிமை

என்றான்.” என்றலும்-அவருடைய பக்கத்தில் இருந்த மக்கள் என்று இவ்வாறு கேட்டவுடன். நின்ற-அந்தத் திருமணப் பந்தலில் நின்றுகொண்டிருந்த ஐயர்-யாவருக்கும் தந்தையாரைப் போன்றவராகிய கிருபாபுரீசர். இங்கு-இந்தப் பக்கத்தில் தான். உளேன்-இருக்கிறேன்: இடைக்குறை. இருப்பும்