பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 85 *அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே.","அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம்.' ', கழல் காட்டி அச்சன்.", அத்தன் மாமலர்ச் சேவடி", "ஞான வாள் ஏந்தும் ஐயர். , அத்தன் பெருந்துறையான்.'; : 'அரிய பொருளே அவிநாசி அப்பா.', 'சிவமாக்கி எனை ஆண்ட அத்தன்., "ஐயன்எனக் கருளியவா றார்பெறு வார்.’’ என்று மாணிக்கவாசகரும், "எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே.",கண்டெந்தை என்றிறைஞ்சி' 3. என்று காரைக்காலம்மையாரும், அப்பனை அம்மனை. ”, "ஐயா இவை நன்கு கற்றாய்.” என்று சேரமான் பெருமாள் நாயனாரும், தாயும் நீயே தந்தையும் நீயே.” என்று நக்கீர தேவ நாயனாரும், முக்கண் அப்பனுக்கு..' என்று கல்லாட தேவ நாயனாரும், "எந்தாய் அடித்தொண்டர்' என்று கபிலதேவ நாயனாரும், பிரமன் தனக்குத் தாதை தன் தாதை., 'அயிரா வனத்துறை ஆடும் அப்ப.', 'தாய் தந்தையாய் உயிர்காப்போன். என்று பட்டினத்துப் பிள்ளையாரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 48-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: குழைகளை மறைத்து விட்டு எழுந்தருளிய காதுகைைளப் பெற்ற கிருபாபுரீசனைக் குற்றம் சிறிதும் இல்லாத நம்பி யாருரர் பார்த்து, இந்த முதிய அந்தணன் பழைய மன்றாடி போலும்' என்று எண்ணி, நற்குணங்களால் சிறப்பை மிகுதி யாகப் பெற்றதும் அந்த அந்தணனிடம் விருப்பம் உண்டா வதும் ஆகிய திருவுள்ளம் கோபம் பொங்கி எழ, நீ வெண் ணெய்நல்லூரில் வாழ்பவன் ஆனால் உன்னுடைய தவறான வழியில் உள்ள வழக்கை அந்த ஊரில் எடுத்துச் சொல்ல நீ வருவாயாக." என்று சுந்தர மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு: - -