பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பெரிய புராண விளக்கம்-2

'குழைமறை காதி னானைக் கோதில்ஆ ரூரர் நோக்கிப்

பழையமன் றாடி போலும் இவன்' என்று பண்பின் மிக்க விழைவுறு மனமும் பொங்க, வெண்ணெய்கல் லூரா

- - யேல்உன் பிழைநெறி வழக்கை ஆங்கே பேசt போதாய்’ என்றார்.’’

குழை-சங்கக் குழைகளை ஒருமை பன்மை மயக்கம். மறை-மறைத்துக் கொண்டு எழுந்தருளிய. காதினானைகாதுகளைப் பெற்ற கிருபாபுரீசனை: ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. கோது-ஒரு குற்றமும். - இல்-. இல்லாத க ைடக் கு ைற - ஆரூரர்-நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனார். நோக்கி-பார்த்து. ப்:சந்தி. இவன்-இந்த முதிய அந்தணன். பழைய மன்றாடி போலும்-நியாய சபையில் பழங்காலம் தொட்டு வழக் காடுபவன் போலும்; இதற்கு வேறு ஒரு பொருளும்

தொனி க் கி றது . அது, இவன் பழங்கால முதல் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளுபவன் போலும்’ என்பது. என்று-என எண்ணி. பண்பின்

நல்ல குணங்களால்; ஒருமை பன்மை மயக்கம். மிக்கமிகுதியான சிறப்பைப் பெற்றதும்; பெயரெச்ச வினையால ணையும் பெயர். விழைவுறு-தம்மை அறியாமலே அந்த அந்தணனிடம் விருப்பத்தை அடையும், மனமும்-திரு வுள்ளமும். பொங்க-கோபம் பொங்கி எழ. வெண்ணெய் நல்லூராயேல்-நீ திருவெண்ணெய் நல்லூரில் வாழ்பவன். ஆனால். உன்-உன்னுடைய. பிழை நெறி-தவறான வழியில் கொண்டு வந்த வழக்கை-நான் உன்னுடைய அடிமை என்று கூறும் வழக்கை. ஆங்கு-அந்தத் திருவெண் ணெய் நல்லூரில் உள்ள நியாய சபையில்; இட ஆகு பெயர். ஏ: அசை நிலை. பேச-எடுத்துச் சொல்ல. நீ போதாய்நீ வருவாயாக. என்றார்-என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.