பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பெரிய புராண விளக்கம்-4

மேல் கதிரோன் எழும் காட்சி கார்ட்ட்." (திருவோலக்கப் படலம், 2, 3), கருவரை சூழ்ந்து நின்ற பின்னொளி யைக் கட்டிய பீதக ஆடை, தோத்திரப் படலம், 14), மறிந்தார் சிலர் மலைபோல். (இலங்கை அழித்த படலம், 43), விலங்கல் மேல் இடி வீழ்ந்தென வீழ்ந் தனன்.', 'மலை விழுந்தென வீழ்ந்தனள் மண்ணின்மேல்.’’, குன்று சென்றதென்வுட் கொதித்து மண்டி மேல்விழா.' (வரை எடுத்த படலம், 40, 48, 58), "அரக்கர்கோன் கரிய மேனி அணிதிகழ் முருக்குப் பூத்த, பொருப்பெனக் குருதி பொங்க.', 'மைவரை போல் மெய்யரக்கன்.', 'மலைமேலே வந்ததொரு மலை வீழ்ந்ததென வீழ்ந்தான்.', 'விலங்கல் வந்து விழுவது போல்.’’, 'விலங்கல் மேல்மின் பரந்ததென வீரபட்டம் துதல்விசித்து.', 'குன்றின் வீழ் அசனி என்ன அவன்வென்பு மேனி, ஒன்றிய அங்கமெல்லாம் உருத் தெரிவுறாத வண்ணம் கன்றிய குருதி நீராய்க் கரைத்தது கதையாம் கூற்றம்.’’, ஒரு தடங்கிரி நடந்து வருகின்ற தெனவும், கும்பகருணன் குருதி கண்கள் வழி சிந்த ஒரு குன்றென நடந்தும்பரடை தன்கை ஒரு தண்டுகொ டறைந் தனன்." (திக்கு விசயப் படலம், 61, 85, 96, 110, 133, 197, 217), மேருவை ஒக்கும் மேனியன்.’’, ‘மலை விழுவதுபோல் வீழ்ந்தனன்.' (வாலி வாலாற் கட்டுண்ட படலம், 7, 20), அக்குன்றனையோன் உயிர் அலைப்ப.', 'குன்றனைய வாளவுனன்." (இலவணன் வதைப் படலம், 92, 110) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றையும் காண்க.

பிறகு வரும் 34-ஆம் பாடலின் கருத்து வருமாறு: ‘மலை நெற்களைக் குத்தின அரிசிகளால் சமைத்த சோறு வேறு வேறாக அமைந்தவை, புற்களோடு சேர்த்துச் செய்த பாற்சோறு, அழகு மிக்க மலையில் விளைந்த திணை யரிசியால் சமைத்த மென்மையா ன சோறு, மூங்கிலரிசிகளால் சமைத்த வன்மையான சோறுகள் ஆகிய இவற்றையும் வேறு உணவுகளையும் சமைக்கும் தொழிலில் வல்ல வேடர்கள் சமைத்து அவற்றோடு கலந்த விலங்குகளி