பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 99.

கலந்து. விளங்கனி-விளாம்பழமாகிய, க்: சந்தி. கவளம்கவளத்தை கொள்வார் - உட்கொள்வார்கள்; ஒருமை :ன்மை மயக்கம். நந்திய-பெருகி உள்ள. ஈயல்-ஈசல்களை; ஒருமை பன்மை மயக்கம். உண்டி-பொரித்த உணவை. நசையொடு-விருப்பத்தோடு. மிசைவார்-சாப்பிடுவார்கள்; ஒருமை பன்மை மயக்கம். வெவ்வேறு-இவ்வாறு வேறு வேறாக உள்ள அந்தம்-முடிவு. இல்-இல்லாத கடைக் குறை, உணவின்-உணவுகளை உண்டதனால்; ஆகுபெயர். அளவு-கணக்கு. இலார்கள் இல்லாதவர்களாகிய வேடர்கள்; இடைக்குறை. மேலோர்-மேலுலகத்தில் வாழும் தேவர் களைப் போல; ஒருமை பன்மை மயக்கம். ஆயினர். ஆனார்கள்: ஒருமை பன்மை மயக்கம். இந்தப் பாடலில், * அருந்துவார், அயில்வார், கொள்வார், மிசைவார்’ என ஒரே பொருள் உடைய நான்கு சொற்கள் வந்தன. இது ஒரு பொருட் பல சொல் அணி.

அடுத்து உள்ள 86-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'உடுப்பூருக்குப் பக்கத்தில் உள்ள மலை மேல் உள்ள ஊர்களிலிருந்து வந்த வேடர்களும், அருமையான குடி யிருப்புக்களில் இருந்து வாழ்கிற வேட்டுவர்களும், இயல் பான பல வகை உணவுகளை உண்டதனால் திருப்தியை அடைந்த வேடர் சாதிப் பெண்களும், வேடர்கள் ஆகிய எல்லோரும் உயரமான வானத்தில் உலவும் சூரியன் உச்சியி லிருந்து அகன்று போக அந்தப் பிற்பகல் நேரத்தில் ஒழிதல் இல்லாத பல வகையான கள்ளுக்களைக் குடித்து மயக் கத்தை அடைகின்ற களிப்பில் நெடுநேரம் இருந்து வரிந்த வில்விழாவைக் கொண்டாடுபவர்கள் ஆனார்கள். பாடல்

வருமாறு: -

அயல்வரைப் புலத்தின் வந்தார், அருங்குடி இருப்பின்

உள்ளார், இயல்வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம். உயர்கதிர் உச்சி நீங்க ஒழிவில்பல் நறவு மாந்தி மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்.