பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 103

துளை-துளைகளை ஒருமை பன்மை மயக்கம். கொள்கொண்ட வேயும்-மூங்கிலால்ான புல்லாங் குழலும். எண் திசை-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வட மேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசை களிலும்; திசை: ஒருமை பன்மை மயக்கம். நிறைந்துநிரம்பி. விம்ம-முழங்க, எழுந்த-அவ்வாறு எழும்பிய. பேரொலியினோடும்-பெரிய சத்தத்தோடும். திண்-உறுதி யான. திறல்-ஆற்றலைப் பெற்ற. மறவர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஆர்ப்பு-செய்யும் ஆரவாரமும். ச்: சந்தி. சேண்-மேலே உள்ள. விசும்பு-ஆகாயத்தை. இடித்து - இடித்துக்கொண்டு. ச்: சந்தி. செல்ல-போக. க்: சந்தி. கொண்ட-வேடர்கள் கொண்டாட மேற்கொண்ட சீர்-சீர்த்தியைப் பெற்ற விழவு-வில்விழா. பொங்க-பொங்கி எழும் வண்ணம். க், சந்தி. குறிச்சியை-அந்தக் குறிஞ்சி நிலத்து ஊராகிய உடுப்பூரை, வலம்கொண்டார்கள்-வல மாக வந்தார்கன். . . .

பின்பு உள்ள 39-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'மலைப் பக்கத்தில் வாழும் வேடர்கள் இவ்வாறு மகிழ்ச்சியோடு வில்விழாவைக் கொண்டாட, வேடர்சாதிப் பெண்மணிகள் துணங்கைக் கூத்தை ஆட, சேர்ந்த ஆனந்தத்தோடும் அச்சத்தைத் தரும் தெய்வப் பெண்கள் நடனம் புரிய, வெற்றியைத் தரும் வில்விழாவோடும் விருப் பத்தைப் பெற்ற இறுதி நாளாகிய ஏழாவது தினமாகிய அன்றைக்கு இரண்டு மடங்கு தங்களுடைய கொண்டாட்ட மாகிய செயலை அழகு பெறுமாறு நடத்திய பிறகு. பாடல் வருமாறு: -

  • குன்றவர் களிகொண் டாடக் கொடிச்சியர் துணங்கை

ஆடத் துன்றிய மகிழ்ச்சி யோடும் குர்அர மகளிர் ஆட வென்றிவில் விழவி னோடும் விருப்புடை ஏழாம் நாளாம் அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்ன்ர்.'