பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 03 பெரிய புராண விளக்கம்-4

பூருக்கு அரசனும், மையைப் போன்ற திருமேனி நிறத்தைப் பெற்றவனும், மலைகளைப் போன்ற தோள்களைப் பெற்ற வனும் ஆகிய நாகனும் மலைப் பக்கங்கள் எல்லாவற்றிலும் காடுகள் எல்லாவற்றிலும் எல்லை இல்லாத காலம் தன்னு டைய கையில் பிடித்த அழகிய நிறத்தைக் கொண்ட வில்லால் விலங்குகளை வேட்டையாடி, பகைவர்களுடைய கூட்டமாகிய பசுமாடுகளினுடைய வரிசைகள் பலவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்து, காட்டைப் பாது காத்துத் தன்னுடைய உடம்பின் இயல்பு தளர்ச்சியை அடையும் முதுமையாகிய கிழப் பருவத்தை அடைந்து வில்லையே ஏராகக் கொண்டு போராகிய உழவைச் செய்யும் பெரிய முயற்சியில் மெலிவை உடையவன் ஆனான். பாடல் வருமாறு: -

இவ்வண்ணம் திண்ணனார் கிரம்பும் நாளில்

இருங் குறவர் பெருங்குறிச்சிக் கிறைவன் ஆய மைவண்ண வரைநெடுந்தோள் நாகன் தானும்

மலைஎங்கும் வனம் எங்கும் வரம்பில் காலம் கைவண்ணச் சிலைவேட்டை யாடித் தெவ்வர் கணகிரைகள் பலகவர்ந்து கானம் காத்து மெய்வண்ணம் தளர் முப்பின் பருவம் எய்தி

வில்லுழவின் பெருமுயற்சி மெலிவான் ஆனான்.'

இவ்வண்ணம்-இவ்வாறு. திண்ணனார்-அந்தத் திண்ண :னார். நிரம்பும்-வளர்ச்சியை அடைந்து நிரம்பி வரும். நாளில்-காலத்தில். இரும்-கரிய நிறத்தைப் பெற்ற. குறவர். குறவர்கள் வாழும்; ஒருமை பன்மை மயக்கம். பெரும்-பெரிய குறிச்சிக்கு-குறிஞ்சி நிலத்தில் உள்ள ஊராகிய உடுப்பூருக்கு. இறைவன்-அரசன். ஆய-ஆக விளங்கிய. மை-மையைப் போன்ற, வண்ண-கரிய உடம்பின் நிறத்தையும். வரை-மலை களைப்போன்ற ஒருமை பன்மை மயக்கம். நெடும்-உயரமாக விளங்கும். தோள்-தோள்களையும் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். நாகன்தானும்-நாகனும், தான்: அசைநிலை. மலை எங்கும்-மலைப் பக்கங்கள் எல்லாவற்றிலும்; ஒருமை பன்மை