பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பெரிய புராண விளக்கம்-4

! அங்கண்மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும்

அடலேனம் புலி கரடி கடமை ஆமா வெங்கண்மரை கலையொடுமான் முதலா யுள்ள

மிருகங்கள் மிகநெருங்கி மீதுர் காலைத் "திங்கள்முறை வேட்டைவினை தாழ்த்த தென்று சிலைவேடர் தாமெல்லாம் திரண்டு சென்று தங்கள் குல முதற் றலைவன் ஆகி உள்ள

தண்தெரியல் நாகன்பால் சார்ந்து சொன்னார். ' அங்கண்- அந்த இடத்தில் உள்ள அழகிய இடத்தைப் பெற்ற எனலும் ஆம். தடம்-விசாலமான மலை சாரல் - மலைப்பக்கங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. புனங்கள் - தினைக்கொல்லைகள். எங்கும் - ஆகிய எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். அடல் - வலிமை யைப் பெற்ற. ஏனம்-காட்டுப்பன்றியும். புலி-புலியும். கரடிகரடியும். கடமை-கடமை மானும். ஆமா-காட்டுப்பசு மாடும். வெம்-கொடியவையாக இருக்கும். கண்-கண்களைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். மரை-மரை என்னும் வகை மானும். கலையொடு-கலைமானோடும். மான்-புள்ளி மானும். முதலாய்-முதலாகி. உள்ள இருக்கிற. மிருகங்கள்விலங்குகள். மிக-மிகுதியாக நெருங்கி-நெருங்கி வந்து. மீதுமேலும் மேலும். ஊர்-வரும். காலை-காலத்தில். த்: சந்தி. திங்கள்-ஒவ்வொரு மாதமும். முறை-முறையாகச் செய்யும். வேட்டை- வேட்டையாகிய, வினை-தொழில். தாழ்த்ததுசரியாக நடைபெறாமல் தாமதம் ஆயிற்று. என்று-என. சிலை-விற்களைப் பிடித்த ஒருமை பன்மை மயக்கம். வேடர் தாம்-வேடர்கள்: ஒருமை பன்மை மயக்கம். தாம்: அசை நிலை. எல்லாம்-எல்லாகும். திரண்டு-கூட்டமாகக் கூடி. சென்று-போய். தங்கள்-தங்களுடைய. குல-சாதியினுடைய. முதல்-முதன்மையைப் பெற்ற தலைவன் ஆகி உள்ள. தலைவனாய் இருக்கிற தண்-குளிர்ச்சியைப் பெற்ற. தெரி யல்-மலர்மாலையை அணிந்த நாகன்பால்-நாகனிடத்தை. சார்ந்து-அடைந்து. சொன்னார்-கூறினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். -