பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Iiil4 பெரிய புராண விளக்கம்-4

வேறு-வேறாக உளதோ-ஒன்று இருக்கிறதோ, இடைக் குறை. அதுவே அன்றி-அதனை அல்லாமல் ஏ அசை நிலை. மெய்த்த-உண்மையாக உள்ள. விறல்-வீரத்தைப் பெற்ற, திண்ணனை:திண்னன் என்பவனை. உன்உன்னுடைய. மரபில்-பரம்பரையில். சால-மிகவும். மேம்பட மேம்பாட்டை அடையும் வண்ணம். ஏ : அசை நிலை. பெற்று-பெற்றெடுத்து. அளித்தாய்-அடியேங்களுக்கு வழங்கி னாய். விளங்கு-திகழும். மேன்மை-மேம்பாட்டை. வைத்தகொண்ட சிலை-வில்லை ஏந்திய மைந்தனை-வலிமையைப் பெற்ற உன்னுடைய புதல்வனாகிய திண்ணனை. ஈண்டு. இங்கே அழைத்து-அழைத்துக்கொண்டு வந்து. நுங்கள்உங்களுடைய வரை - மலையை ஆட்சி - ஆளுகின்ற அரசாட்சியை. அருள் - அவனுக்கு வழங்கியருள்வாயாக. வேடர் - வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மகிழ்ந்துமகிழ்ச்சியை அடைந்து. என்றார்- என்று கூறினார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 47-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

விற்களை ஏந்திய வேடர்கள் அவ்வாறு கூற நாகனும் தன்னுடைய புதல்வனாகிய திண்ணனைத் தனக்கு முன்னால் அழைத்துக்கொண்டு வருமாறு ஓர் ஆளிடம் சொல்லி அனுப்பிவிட்டு, மலைப்பக்கத்தில் பொருந்தியுள்ள நீண்ட காட்டில் முதல் முறையாகச் செய்யும் கன்னி வேட்டைக்குத் தன்னுடைய புதல்வனாகிய அந்தத் திண்ணன் செல்லும் பொருட்டுக் காட்டில் உள்ள தெய்வங்கள் மகிழும் வண்ணம் பூசை செய்து நிவேதனங்களைப் படைப்பதற்காகத் தலைமையான பரம்பரையின் வழியில் பிறந்த பூசாரியாகிய தேவராட்டியை அழைத்து வாருங்கள்" என்று கூற, அந்த இடத்தில் இருந்த வேடர்கள் போய் உள்ள நிலைமையை அந்தத் தேவராட்டிக்குக் கூற அந்த நரைத்த தலையை உடைய முதிய கிழவி மிகவும் மகிழ்ச்சி அடைந்து விருப் பத்தோடும் வேகமாக வந்து சேர்ந்தாள். பாடல் - வருமாறு: -