பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பெரிய புராண் விளக்கம்-4

மேலாக இருக்கும் வண்ணம் வாய்க்கப்பெற்று வேறு இடங் களுக்குச் சென்று அங்கே உள்ளவர்களினுடைய பொருள் களைக் கொள்ளையடித்துக் கொண்டுவரும் வெற்றியை அடையும் வண்ணம் காட்டில் தங்கி எழுந்தருளியிருக்கும் கடவுளர்கள் விருப்பத்தைப் பெற்று உண்ணும்படி காட்டில் பூசை போட்டு நிவேதனங்களைப் படைப்பாயாக." என்று கவலை ஒன்றும் இல்லாதவனாகிய நாகன் கூறினான்.' பாடல் வருமாறு : - ”اسماعتسعسب

கோட்டம் இல் என்குலமைந்தன் திண்ணன் எங்கள்

குலத்தலைமை யான்கொடுப்பக் கொண்டு பூண்டு பூட்டுறுவெம் சிலைவேடர் தம்மைக் காக்கும்

பொருப்புரிமை புகுகின்றான் ; அவனுக் கென்றும் வேட்டை வினை எனக்குமேலாக வாய்த்து

வேறுபுலம் கவர்வென்றி மேவு மாறு காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக்

காடுபலி ஊட் டென்றான் கவலை இல்லான்.'

கோட்டம் - ஒரு குற்றமும் இல்-இல்லாத கடைக் குறை. என்-என்னுடைய. குல-குடும்பத்தில் பிறந்த மைந்தன்-வலிமையைப் பெற்ற புதல்வனாகிய, திண்ணன்திண்ணன் என்பவன். எங்கள்-எங்களுடைய. குல-வேட்டுச் சாதிக்கு. த் : சந்தி. தலைமை - தலைமைப் பதவியை, யான்-நான். கொடுப்ப-வழங்க, க் சந்தி. கொண்டு-ஏற்றுக் கொண்டு. பூண்டு-அதனை மேற்கொண்டு. பூட்டு-பூட்டு தலை. உறு-பெற்ற, வெம்-கொடுமையான. சிலை-விற்களை ஏந்தும்; ஒருமை பன்மை மயக்கம். வேடர்தம்மை-வேடர் களை ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. க், சந்தி. காக்கும்-அரசாட்சி செய்து பாதுகாக்கும். பொருப்பு-மலை யினுடைய, உரிமை - உரிமையை. புகுகின்றான்-பெற்றுக் கொண்டு முதல் முதலாக அதைச் செய்கிறான். அவனுக்குஅந்தத் திண்ணனுக்கு. என்றும்-என்றைக்கும். வேட்டைவிலங்குகளை வேட்டையாடுவதாகிய, வினை-தொழில். எனக்கு மேலாக-என்னைவிட மேலாக வாய்த்து-வாய்க்கப்