பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் I 21

பெற்று. வேறு-பிற. புலம்-இடங்களுக்குச் சென்று; ஒருமை பன்மை மயக்கம். கவர்-அங்கே வாழ்பவர்களினுடைய பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டு வரும். வென்றி-வெற்றியை. மேவுமாறு-அடையும் வண்ணம். காட்டில் உறை-காட்டில் தங்கி எழுந்தருளியிருக்கும். தெய் வங்கள்-கடவுளர்கள். விரும்பி-விருப்பத்தைப் பெற்று. உண்ண-உண்ணும்படி. க்: சந்தி, காடு-காட்டில், பலிஊட்டுபூசை போட்டு நிவேதனங்களைப் படைப்பாயாக. பலி: ஒருமை பன்மை மயக்கம். கவலை-ஒரு கவலையும். இல்லான்இல்லாதவனாகிய நாகன். என்றான்-என்று கூறினான்.

பிறகு உள்ள 51-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

அந்த நாகன் கூறிய வார்த்தைகளைக் கேள்விப்பட்ட மலையில் வாழும் தேவராட்டி, "உள்ளம் மகிழ்ச்சியை அடைந்து இந்த இடத்திற்கு அன்புடன் வருகின்ற எனக்கு எந்த நாளைக்காட்டிலும் சகுனங்கள் மிகவும் நல்ல வையாக உண்டாயின; இதனால் உன்னுடைய வலிமை யைப் பெற்ற புதல்வனாகிய தி ண் ண ன் ஆ கி ய வெற்றியைத் தருவதும், வரிந்து கட்டப்பெற்றதும் ஆகிய வில்லை ஏந்தியவ்ன் உன்னுடைய அளவில் அல்லாமல் மேம்பாட்டை அடைகிறான்” என்று கூற, விருப்பத்தை அடைந்து வாழ்த்துக்களை இயம்பி வெற்றியைப் பெற்ற காட்டுக் கடவுளர்கள் மகிழ்ச்சியை அடையுமாறு நிவேதனம் செய்ய வேண்டிய பண்டங்களைக் குறைவு இல்லாமல் வாங்கிக் கொண்டு சென்றாள். பாடல் வருமாறு :

  • மற்றவன்றன் மொழிகேட்ட வரைச்சூ ராட்டி

மனம்மகிழ்ந்திங் கன்போடு வருகின் றேனுக் கற்றையினும் குறிகள்மிக நல்ல ஆன :

இதனாலே உன்மைந்தன் திண்ண னான வெற்றிவரிச் சிலையோன்கின் அளவி லன்றி

மேம்படுகின் றான்." என்று விரும்பி வாழ்த்திக் கொற்றவன தெய்வங்கள் மகிழ ஊட்ட

வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள். '