பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& பெரிய புராண விளக்கம்-4

ஏனாதி நாதர் திறத்து-ஏனாதி நாயனாரிடத்தில், ஏலா - தகாத இகல்-பகைமையை. புரிந்தான்-அதிசூரன் மேற் கொண்டான். • -

பின்பு வரும் 8-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

சூரியன் உதயமாகத் தன்னுடைய ஒளி மங்கி மாலை நேரத்தில் தோன்றும் சந்திரனைப் போலத் தன்னுடைய உள்ளத்தில் வருத்தத்தை அடைந்து ஏனாதி நாயனார் மேம்பட்டு விளங்குவதைச் சகிக்காத அந்த அதிசூரன் என்பவனும் தன்னுடைய ஊரில் வாழும் உறவினர்களோடு கூடப் போருக்குரிய கோலத்தைப் புனைந்து கொண்டு ஏனாதி நாயனாரோடு போர் செய்வதற்காக் அவர்பாற் போய் எதிர்க்கின்ற யுத்தத்தை விளையும் வண்ணம் செய் வதற்கு நினைத்துத் துணிவைப் பெற்று எழுந்து சென் றான். பாடல் வருமாறு : -

கதிரோன் எழமழுங்கிக் கால்சாயும் காலை மதிபோல் அழிந்துபொறா மற்றவனும் சுற்றப் பதியோ ருடன்கூடப் பண்ணி அமர்மேற்சென் றெதிர்போர் விளைப்பதற்கே எண்ணித்

- துணிந்தெழுந்தான்.'"

கதிரோன்-சூரியன். கதிர்-சூரிய கிரணம். எழ-உதய மாக. மழுங்கி-தன்னுடைய ஒளி மங்கி. க் சந்தி. கால் சாயும் காலைமாலை நேரத்தில் தோன்றும். மதியோல்-சந்திர னைப் போல, அழிந்து-தன்னுடைய உள்ளத்தில் வருத் தத்தை அடைந்து. பொறா ஏனாதி நாயனார் மேம்பட்டு விளங்குவதைக் கண்டு சகிக்காத, மற்று: அசை நிலை. அவனும் - அந்த அதிசூரனும். சுற்றப் பதியோருடன்தன்னுடைய ஊரில் வாழும் உறவினர்களோடு. கூடம் பண்ணி-கூடப் போருக்குரிய கோலத்தைப் புனைந்து கொண்டு. அமர்-ஏனாதி நாயனாரோடு போர் செய்வதற் காக. மேற்சென்று-அந்த நாயனாரிடம் போய் எதிர்எதிர்க்கும்.போர்-யுத்தம். விளைப்பதற்கு-விளையுமாறு: